மீனிலும் வந்துவிட்டது ஆபத்து!… மீன் பிரியர்களே மிகவும் உஷார்….. அதிர வைக்கும் காணொளி

வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள போட்டி நிலைமைகள் காரணமாக உணவுப் பொருட்களிலும் போலிகள் அதிகளவில் ஊடுருவியுள்ளன.

பிளாஸ்டிக் உட்பட பல்வேறு செயற்கை பதார்த்தங்களால் அசலைப் போன்று உருவாக்கப்படும் இவ்வாறான போலி உணவுகளால் உடல் ஆரோக்கியத்திற்கு பாரிய அச்சுறுத்தல்கள் உண்டாகி வருகின்றன.

அண்மையில் உலகின் பல்வேறு நாடுகளில் பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் சர்ச்சைகள் உருவாகியிருந்தன. சீனாவே இப்போலி பிளாஸ்டிக் அரிசிகளை சந்தைப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

அதுமட்டுமல்லாது போலியான இறப்பர் முட்டைகள், செயற்கை மட்டன் என விற்பனைக்கு வந்துவிட்டன. இந்நிலையில் கடல் உணவான மீனிலும் தற்போது போலிகள் சந்தைக்கு வந்துள்ளன.

இறப்பர் போன்ற பதார்த்தத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இம் மீன்கள் அதிக அளவில் நீரை உறிஞ்சி வைத்திருக்கக்கூடியன.

அம் மீனை துண்டு துண்டாக வெட்டி நீரில் சில நிமிடங்கள் அமிழ்த்திய பின்னர் பிழியும்போது ஸ்பொன்ஸிலிருந்து நீர் வெளியேறுவது போன்று வெளியேறும். இதன் ஊடாக போலியான மீன்களை கண்டறிய முடியும்.

Related Posts

About The Author

Add Comment