பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்யை கொலை செய்வதற்கு நடந்த சதி

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் 1981ல் நியூசிலாந்து வந்திருந்த போது அவரை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இது குறித்து நியூசிலாந்து நாட்டு உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரிட்டன் ராணி, இரண்டாம் எலிசபெத், 1981ல், நியூசிலாந்து வந்தார். டியூன்டின் நகரில், அவர் பயணம் செய்த போது கிறிஸ்டோபர் லூயிஸ் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது இளைஞன் ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து எலிசபெத் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. யார் சுட்டது என உடனடியாக தெரியவில்லை. இந்த செய்தி வெளியில் தெரியாதபடி போலீசார் மறைத்து விட்டனர்.

சிறிது நாட்கள் கழித்து ஆயுத திருட்டு வழக்கில் லூயிஸ் கைது செய்யப்பட்ட போது தான், ராணியை கொல்ல அவன் முயற்சித்தது தெரிந்தது. இதுபற்றி வெளியில் தெரிந்தால் பிரிட்டன் ராணி எதிர்காலத்தில் நியூசிலாந்துக்கு வருவது தடைப்படும் என்பதால், அப்போது இதை வெளியே சொல்லவில்லை. கைது செய்யப்பட்ட லூயிஸ் மீது ஆயுத திருட்டு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டது.

மனநலம் பாதிக்கப்பட்ட கிறிஸ்டோபர் லூயிஸ், பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான். 1997ல் சிறையில் இருந்த போது அவன் தற்கொலை செய்து கொண்டான்.

Related Posts

About The Author

Add Comment