பேஸ்புக்கில் இருந்து “Explore Feed” செயன்முறையை அகற்ற பேஸ்புக் நிறுவனம் தீர்மானம்

பேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு மேற்கொண்டிருந்த சோதனையோட்டம் தொடர்பில் அநேகமானோர் கவனம் செலுத்தியிருந்தனர்.

அதாவது , பேஸ்புக்கில் News Feed க்கு மேலதிகமாக Explore Feed எனும் பதம் இணைக்கப்பட்டு அது கடந்த ஒக்டோபர் மாதம் முதல் சோதனைக்கு விடப்பட்டது. இதன்மூலம் , சில page பதிவுகளை காணவேண்டும் என்னால் நீங்கள் இந்த Explore Feed ஊடாக காணவேண்டியிருந்தது. இந்த செயன்முறை இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளில் மாத்திரமே சோதனைக்கு விடப்பட்டது.

இலங்கை, பொலீவியா, காம்போடியா, கோதமாலா, சர்பியா , ஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்கே இந்த Explore Feed முறை அறிமுகப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும் ,கடந்த சில மாதங்களாக இந்த Explore Feed முறை சோதனைக்கு விடப்பட்டிருந்த போதும், அது நினைத்த அளவிற்கு வெற்றி அளிக்காததால் குறித்த செயன்முறையை பேஸ்புக்கில் இருந்து அகற்ற பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

About The Author

Add Comment