மனம்திறந்த ரகசியம் மகனின் உடல் எடையால் மனமுடைந்த நீடா அம்பானி…

இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. அவரது மகன் ஆனந்த் அம்பானி அதிக உடல் எடையுடன் காணப்பட்டார். அதனால் அவரின் உருவத்தை வைத்து மற்றவர்கள் கேலி செய்து வந்தனர்.

தன் மகன் அனந்த் அம்பானி உடல் எடையை குறைத்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் நீடா அம்பானி தற்போது தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ல் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அப்போது அந்த கோப்பையுடன் ஆனந்த் அம்பானி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த படத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் ஆனந்தின் பெரிய உருவத்தை வைத்து கேலி, கிண்டலாக மீம்ஸ் வெளியானது.

இதுகுறித்து நீடா அம்பானி கூறுகையில், “என் மகனின் உருவத்தை வைத்து கேலி செய்ததால் மனமுடைந்து இருந்தான். ஆனால் அதுவே அவன் உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது.

உடல் எடையை குறைக்க மும்பை ஜாம்நகரில் 500 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தார். தினமும் 23 கி.மீ நடப்பதை வழக்கமாக்கினார். அதன் மூலம் 118 கிலோ எடையை இயற்கையாக குறைத்தார். பிறர் செய்த கிண்டல் என் மகனை அழகாக்கியுள்ளது.” என பெருமையாக தெரிவித்துள்ளார்.

Related Posts

About The Author

Add Comment