காஜல் ஓபன் டாக்.! அந்த மாதிரி படங்களில் நடிக்கணும்னா இனி இப்படி தான்

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிரபல முன்னணி நடிகையாக நடித்து வருபவர் காஜல் அகர்வால். இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை விட முன்னணி நடிகர்களின் படங்களை தான் அதிகம் நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட ரவி தேஜா நடிக்கும் படத்தில் நடிக்க அதிகமான சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் இவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாது என தயாரிப்பாளர் கூறி விட்டதால் படத்தில் இருந்து விலகி கொண்டார்.

தற்போது அந்த கதாபாத்திரத்தில் அணு இமானு வேல் கமிட்டாகி உள்ளார்.

இதனை பற்றி காஜலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக இருந்தால் சம்பளத்தை குறைக்கலாம்.

இந்த மாதிரி மசாலா படங்களுக்கு சம்பளத்தை குறைக்க முடியாது என ஓபனாக கூறியுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment