யாழ்ப்பாணத்திலுள்ள அரச வங்கி ஒன்றுக்காக கொண்டு சென்ற 80 லட்சம் பணம் கொள்ளை

யாழ்ப்பாணத்திலுள்ள அரச வங்கி ஒன்றுக்காக கொண்டு சென்ற பணம் காணாமல் போனமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் சேவை செய்யும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கிக்கு கொண்டு சென்ற 11,074,000 ரூபா பணத்தில் 8,020,000 ரூபா பணம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்ம 9ஆம் திகதி அனுராதபுரம் வங்கியிலிருந்து யாழ்ப்பாண வங்கிக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் பணத்தை கொண்டு செல்லும் போது தேனீர் அருந்துவதற்காக வாகனத்தை இடைநடுவில் நிறுத்தியுள்ளனர்.

அவர் தேனீர் அருந்தி விட்டு வாகனத்திற்கு வந்து பார்க்கும் பணம் இருந்த 2 பைகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர். அந்த பைகள் இரண்டையும் யாராவது திருடி சென்றிருக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எப்படியிருப்பினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பணம் கொண்டு சென்ற அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 56,43,24 மற்றும் 23 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

About The Author

Add Comment