சாய் பல்லவி நம்பிக்ககை தமிழில் எனக்கு வரவேற்பு கிடைக்கும்:

சாய்பல்லவி மலையாளம், தெலுங்கை தொடர்ந்து தமிழில் கால் பதிக்கிறார். மலையாளத்தில் இவர் அறிமுகமான ‘பிரேமம்’, தெலுங்கில் வந்த முதல் படம் ‘பிடா’ ஆகியவற்றின் வெற்றி மலையாளத்திலும், தெலுங்கிலும் சாய்பல்லவிக்கு தனி அந்தஸ்தை கொடுத்தன.
இப்போது‘கரு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடித்தது பற்றி சாய்பல்லவி கூறுகிறார்…..
“ ‘கரு’ படத்தில் நான் ஒரு குழந்தையின் அம்மாவாக நடிக்கிறேன். இதை சிலர் கிண்டல் செய்தனர். ஆனால் அதுபற்றி நான் கவலைப்படவில்லை.
மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்த கதை என்னை பாதித்தது. அதுபோல் தெலுங்கு பிடா கதையும் என்னை கவர்ந்தது. அதனால் தான் தமிழிலும் அதுபோன்ற நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்போது. இயக்குனர் விஜய் என்னை தொடர்பு கொண்டு ‘கரு’ கதையில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். முதலில் அது பெரிதாக தெரியவில்லை. எனவே, இதில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.
ஆனால், அவர் என் அம்மாவை சந்தித்து கதையை சொல்லி இருக்கிறார். அம்மாவுக்கு கதை பிடித்துப்போனதால், அதன் ஆழம் பற்றி கூறினார். அதன்பிறகு முழு கதையையும் கேட்டேன். அது என்னை கவர்ந்தது. எனக்குள் முழு தாக்கத்தை ஏற்படுத்தியது நடித்தேன். ‘பிரேமம்’ ‘பிடா’ படங்களைவிட ‘கரு’ எனக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தரும்” என்றார்.

Related Posts

About The Author

Add Comment