உலக நாடுகளில் பலாத்காரத்துக்கு வழங்கப்படும் மோசமான தண்டனைகள்

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நவீனம் நாகரிகம் என்று பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றளவும் பெண்கள் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.பெண்கள் தனியாக பயணிக்கிறார்கள், இரவு நேரம் ஏன் வெளியில் வர வேண்டும், ஆபாச உடை அணிகிறார்கள், என்று பெண்கள் தான் இந்த தவறுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதைத் தாண்டி பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு இங்கே சரியான தண்டனை வழங்கப்படவில்லை என்பதும் மிகப்பெரிய ஒரு வாதமாக வைக்கப்படுகிறது.பாலியல் வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் என்னென்ன தண்டனை வழங்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சீனா : சீனாவில் பாலியல் வன்கொடுமை செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு நிச்சயம் மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது. சில நேரங்களில் பாலியல் குற்றவாளிக்கு அவரது பிறப்புறுப்பு சிதைக்கப்படுகிறது.

இரான் : இரான் நாட்டில் பாலியல் குற்றவாளி நிரூபிக்கப்பட்டால் இங்கேயும் நிச்சயம் மரண தண்டனைதான். பெரும்பாலும் பொதுமக்கள் முன்னிலையில் தான் நிறைவேற்றப்படுகிறது, சில முறை மரண தண்டனையிலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகளுக்கு 100 கசையடிகள் வழங்கப்படுகிறது. இதுவும் பொதுமக்கள் முன்னிலையில் தான்.

நெதர்லாந்து : நெதார்லாந்தில் பாலியல் அத்துமீறலுக்கு கூட தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. ஒருவரின் அனுமதியின்றி முத்தம் கொடுத்தால் கூட அதனை குற்றமாக எடுத்துக் கொள்கிறார்கள்.குற்றத்தைப் பொருத்தும், குற்றவாளியின் வயதைப் பொருத்தும் நான்கு முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

பாலியல் தொழிலாளிகள் : பெரும்பாலான இடங்களில் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கக்கூடிய வன்கொடுமைகள் எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.இந்தியாவில் கணவனால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகும் பெண்களின் வேதனைகள் எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லையோ அதே போலத்தான்.ஆனால் நெதர்லாந்தில் அப்படியல்ல பாலியல் தொழிலாளர்களை வன்கொடுமை செய்தால்,நான்காண்டாடுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கிறது.

Related Posts

About The Author

Add Comment