(09-04-2018) இன்றைய ராசிபலன்!!

மேஷம்:
இன்று வியாபாரிகளுக்கு நல்ல விதமாக பண வசதிகள் அனைத்தும் வேண்டியபடி கிடைக்கும். தடைப்பட்டு பாதியில் நின்ற தொழில் கட்டுமானம் தற்போது முடிவடையும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளை வசமாக்கும் நூதன கவர்ச்சி தெரியும். அனைவரும் உங்கள் வழிக்கு வருவார்கள். எதையும் தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்:
இன்று நீங்கள் எதிர்பார்த்த மழலை செல்வம் இதோ உங்கள் வீட்டில் தவழப் போகிறது. தொழில்கள் அமைதியாக நல்லவிதமாக நடக்கும். பணத்தை முதலீடுகளாக மாற்ற சிறந்த நேரம். பெண்களுக்கு சகோதர உதவி பரிபூரணமாகக் கிட்டும். கண் பார்வையில் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனே பார்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்:
இன்று சொன்ன சொல்லை நீங்களே மாற்றி மாற்றி பேசுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் இருக்கும். கோபம் குறைந்து கனிவு பிறக்கும். இனி கடுமையாக பேசாமல் இங்கிதமாகவும் இதமாகவும் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். தெய்வ வழிபாடு தினமும் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்:
இன்று உங்களுடைய கௌரவம் உயரும் நாள் இது. உங்களது முக்கியத்துவம் உணரப்படும். லக்ஷ்மிகரமான வாழ்க்கை அமைய சவுகரியமான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்வீர்கள். சில சிரமங்களுக்கிடையே சில நன்மைகளைச் செய்ய வாய்ப்புண்டு. பயணத்தின்போது எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம்:
இன்று பூர்வீகச் சொத்தை பாகப் பிரிவினை செய்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய பதவிகள் தேடிவரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். திடீர் யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

கன்னி:
இன்று ஸ்பெகுலேஷன் துறைகள் அளவோடு நன்மை தரும். கணவன் மனைவி இடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை. கலைத்துறையினர், மாதர்கள் ஆகியோருக்கெல்லாம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கைத்துணைவரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்:
இன்று பேசும் போது நிதானம் தேவை. உடன் பணிபுரிபவர்களின் மீது அதிக கோபத்தைக் காட்ட வேண்டி வரலாம். சிறு வியாபாரிகளுக்கு பணம் வந்து பையை நிரப்பும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. கோவில்களுக்குச் சென்று வாருங்கள். மன நிம்மதி கிடைக்க யோகா போன்ற பயிற்சி செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

விருச்சிகம்:
இன்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள். மன உறுதி உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரங்கள் சூடுபிடிக்கும். தூர தேசத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களைச் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு:
இன்று பொருளாதார நிலையில் சுமாரான நிலை இருக்கும். தொழிற்கல்வி பயில்வோர் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பிறதுறை சம்பந்தப்பட்ட மாணவர்கள் அதிகமாக முயற்சி எடுத்து படித்தல் அவசியம். வெளிநாடு சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும். விரும்பியது கிடைக்கவில்லை என கவலை கொள்ள வேண்டாம். கவனமுடன் உங்கள் கல்வியைத் தொடரவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மகரம்:
இன்று உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் வரும். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:
இன்று கோபம் குறைந்து கனிவு பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். நீங்களும் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, மயக்கம் எல்லாம் நீங்கும். பார்வைக் கோளாறு சரியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்:
இன்று பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். தேனொழுகப் பேசுகிறார்கள் என்று யாரையும் நம்பி விட வேண்டாம். அடிக்கடி கோபப்பட்டு டென்ஷனாவீர்கள். உணவில் உப்பு, காரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை அளவை மாதந்தோறும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். லாகிரி வஸ்துக்களை பயன்படுத்துபவர்கள் இனி அவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Related Posts

About The Author

Add Comment