முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற உதவும் 6 பொருட்கள்!

அழகான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெறுவது கஷ்டமான விஷயம் ஒன்றும் அல்ல. தினமும் ஒரு 10-20 நிமிடம் செலவழித்தாலே போதுமானது. பொதுவாக முகம் பொலிவிழந்து அசிங்கமாக காணப்படுவதற்கு காரணம், முகத்தில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருப்பது தான். இத்தகைய அழுக்குகளை அன்றாடம் சுத்தம் செய்து வந்தாலே, முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ளலாம்.

முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய உதவும் பொருட்கள் என்ன என்று நீங்கள் கேட்கலாம். எனவே தமிழ் போல்ட் ஸ்கை தினமும் முகத்தில் படியும் அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற உதவும் சில சமையலறைப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் முகம் பொலிவோடு இருக்கும்.

பாதாம் பேஸ்ட்

பாதாமில் சருமத்திற்கு வேண்டிய வைட்டமின் ஈ ஏராளமாக நிறைந்துள்ளது. அத்தகைய பாதாமை பொடி செய்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு, கடலை மாவு மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து கழுவி வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, சருமத்திற்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

உளுத்தம் பருப்பு

உளுத்தம் பருப்பில் கனிமச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே 1/2 கப் உளுத்தம் பருப்பை நீரிடல் ஊற வைத்து அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வாரத்திற்கு மூன்று முறை இதைக் கொண்டு 15 நிமிடம் ஸ்கரப் செய்து கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பொலிவோடு காணப்படும்.

பச்சை பயறு

பச்சை பயறில் வைட்டமின் ஏ, சி அதிகம் உள்ளது. மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றக்கூடியதும் கூட. எனவே அத்தகைய பச்சை பயறை பொடி செய்து, அதில் தேன் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அரிசி மாவு

அரிசி மாவில் வைட்டமின் ஈ, கே மற்றும் பி6 உள்ளது. இது சோர்வடைந்து காணப்படும் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும். அதற்கு அரிசி மாவை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி முகம் மற்றும் கை, கால்களிலும் தடவி ஸ்கரப் செய்தால், அழுக்குகள், இறந்த செல்களுக்கு முழுவதும் வெளிவந்து, முகம் பிரகாசமாக இருக்கும்.

ஜவ்வரிசி

1 டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கி, நன்கு வெந்த ஜவ்வரிசியை ஒரு பௌலில் போட்டு, அதில் 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் மூல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்ச்சரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்மு, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வர, உங்கள் முகம் அழகாக காட்சியளிக்கும்.

கல் உப்பு

கல் உப்பில் கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இத்தகைய கல் உப்பை ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி மென்மையாக 10 நிமிடம் ஸ்கரப் செய்து வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சரும செல்கள் புத்துணர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.

[img]http://tamil.boldsky.com/img/2016/01/25-1453700255-6-epsamsalt.jpg[/img]

Related Posts

About The Author

Add Comment