தமன்னாவின் ஷுட்டிங் பொங்கல்

இந்த பொங்கலுக்கு தென்காசி அருகில் ‘தர்மதுரை’ ஷுட்டிங்கில் இருந்தார் தமன்னா.

விஜய் சேதுபதி, சீனுராமசாமி என்று அவரை சுற்றி முன்னாள் கிராமத்து காளைகள்! விடுவார்களா? ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே சுட சுட பொங்கல் வைத்துவிட்டார்கள். ஜல்லிக்கட்டு, மாடுபிடி தவிர மற்ற மற்ற பொங்கல் சிறப்புகள் எல்லாவற்றையும் அவர் கண்ணில் காட்டிவிட்டார்கள். “இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பல முறை ஸ்வீட் பொங்கல் சாப்பிட்டிருக்கேன். ஆனால் இந்த முறை சாப்பிட்ட பொங்கலும், அதன் நினைவுகளும் என்னால் மறக்கவே முடியாது” என்று தமன்னா கூறியதை, நாங்க மட்டும் மறந்துருவோமாக்கும்!

Related Posts

About The Author

Add Comment