ஹோமாகம நீதிமன்றில் குழப்ப நிலையை தோற்றுவித்தவர்களை கைது செய்ய உத்தரவு

நேற்றைய தினம் ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தை மீறிய நிலையில் நடந்து கொண்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஹோமகம பொலிஸார் நீதிமன்றிற்கு விளக்கமளித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரத்த அழுத்தம் அதிகரித்திருக்கின்றதா என பரிசோதனை செய்ய வேண்டும் என தேரர் கோரிக்கை விடுத்ததனால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உபுல்தெனிய கூறினார்.

Related Posts

About The Author

Add Comment