யோஷித்தவின் கடற்படை பயிற்சிகளுக்காக கடந்த அரசு எவ்வளவு செலவிட்டது தெரியுமா?

யோஷித்த ராஜபக்ஷவின் வௌிநாட்டு கடற்படை புலமைப் பரிசில் மற்றும் பயிற்சிகளுக்காக கடந்த அரசாங்கத்தால் இரண்டு கோடிக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் நலிந்த ஜெயதிஸ்ஸ எழுப்பி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இளம் அதிகாரிகளுக்கான பாடத்திட்டம் – பிரித்தானியா – 6,284,219.25 ரூபா

கப்பல் தொடர்பான கடற் பயிற்சிகள் – பிரித்தானியா – 7,031,614.75 ரூபா

உபலுத்தினல் தொழிநுட்ப பயிற்சிகள் – பிரித்தானியா 5,333,667.07 ரூபா

விஷேட கல்விப் பயிற்சி – தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் – உக்ரைன் – 357,331,06 ரூபா, என கடந்த ஆட்சிக் காலத்தில் செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment