புல்லட் பைக்கை ஓட்டியபடி திருமண அரங்கிற்கு வந்த மணப்பெண்

ஆமதாபாத்தை சேர்ந்த ஆயிஷா உபாத்யாய். கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. மணமகள் எப்போது வருவார் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனார். அப்போது ஒரு புல்லட் பைக் சத்தம் கேட்டது. யாரும் எதிர்பாராத விதமாக ராயல் என்பீல்ட் புல்லட் பைக்கை ஓட்டியபடி ஆயிஷா, திருமண அரங்கிற்குள் நுழைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

மணக் கோலத்தில், புன்னகையுடன் ஆயிஷா புல்லட்டில் வர, சினிமா பாணியில் பின்னணியில் அதற்கு தகுந்தாற் போல் இசையும் ஒலிக்கப்பட்டது. ஆயிஷா, புல்லட் ஓட்டியபடி திருமணத்திற்கு வந்த போட்டோக்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆயிஷா உபாத்யாய் 13வது வயதில் இருந்து புல்லட் ஓட்டி வருகிறாராம். ஆனால், அவரது கணவருக்கு புல்லட் ஓட்டத் தெரியாதாம். அதனால் திருமண அரங்கிற்குள் புல்லட்டில் வந்ததுடன், தனது கணவரையும் புல்லட்டில் அமர வைத்து வலம் வந்துள்ளார் ஆயிஷா.

Related Posts

About The Author

Add Comment