கவுதமி தனது மகள் குறித்து பரவிய வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்

தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படம் தற்போது தமிழில் உருவாகி வருகிறது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை பாலா இயக்கி வருகிறார். `வர்மா’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் நாயகி தேர்வு நடந்து வருகிறது.
இந்நிலையில், துருவ் ஜோடியாக கவுதமியின் மகள் சுப்புலட்சுமி தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. தற்போது அந்த தகவல் குறித்து நடிகை கவுதமி விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து கவுதமி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
எனது மகள் சுப்புலட்சுமி, சினிமாவில் அறிமுகமாகவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதில் உண்மை இல்லை. சுப்புலட்சுமி தற்போது அவளது மேற்படிப்பில் பிசியாகிவிட்டார். எனவே தற்போது படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை, உங்கள் அன்புக்கு நன்றி இவ்வாறு  கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நேபாளத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். #Varma #DhruvVikram
Loading...

Related Posts

About The Author

Add Comment