சினிமாவில் தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க தயார் ,ஆண்ட்ரியா

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கும் ஆண்ட்ரியா, அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். #AndreaJeremiah

ஆண்ட்ரியா வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் இவர் நடித்த ‘தரமணி’ படத்தில் இவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டது. பாராட்டுகளும் குவிந்தன.

இந்த நிலையில், சென்னையில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்ட்ரியா பேசும் போது கூறியவை…

“சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த நடிகருடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

‘தரமணி’ படத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன் பிறகு படவாய்ப்பு எதுவும் வரவில்லை. கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் நான் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒரு போதும் அது எனக்கு மகிழ்ச்சியை தராது. திரைப்படத்தில் நிர்வாணமாகக் கூட நான் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், நான் நடிக்கும் படத்தில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்”. #AndreaJeremiah

Related Posts

About The Author

Add Comment