புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்

பிரித்தானியாவை சேர்ந்த உலக புகழ்பெற்ற விஞ்ஞானி, எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76-வது வயதில் காலமானார்.

கடந்த 1942-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் திகதி பிறந்த ஸ்டீபன் விஞ்ஞானி, கோட்பாட்டு இயற்பியலாளர், பேராசிரியர், எழுத்தாளர் என பல விடயங்களில் திறமைசாலியாக திகழ்ந்தார்.

ஸ்டீபன் 21 வயதிலேயே, ஏமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis) என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார்.

இதனால் அவரின் கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தார்.

பின்னர் கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராக திகழ்ந்தார்.

இவ்வளவு சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஸ்டீபன் இன்று உயிரிழந்துவிட்டதாக அவரின் குடும்பத்தாரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

குவாண்டம் கோட்பாடு, கருந்துளை கோட்பாடு உள்ளிட்டவற்றை உருவாக்கியவரும் இவரே.

கருந்துளை(Black Holes) குறித்த ஆய்வில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஏ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (A Brief History of Time) உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

ஸ்டார் ட்ரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன், தி சிம்ப்சன்ஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அவரை இன்னும் மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்த்தன.

Related Posts

About The Author

Add Comment