எந்ததெந்த ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம்…

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
எண்ணிய எண்ணம் ஈடேறுவதில் சிறு தடங்கல்கள் உண்டாகும். தேவையில்லாமல் மற்றவர்களை விமர்சனம் செய்யாதீர்கள். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை செய்யாதீர்கள். எதிர்காலம் சம்பந்தமான பணிகளைச் செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு

அதிர்ஷ்ட எண் – 6

அதிர்ஷ்ட நிறம் – சந்தன வெண்மை

ரிஷபம்

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகளை செய்வீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட எண் – 2

அதிர்ஷ்ட நிறம் – வெண்மை

மிதுனம்

எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் உங்களின் மதிப்பு கூடும். தெய்வ காரியங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கீர்த்திகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு

அதிர்ஷ்ட எண் – 4

அதிர்ஷ்ட நிறம் – சாம்பல் நிறம்

கடகம்

பிள்ளைகளின்ஆதரவால் தொழிலில் எண்ணிய லாபம் உண்டாகும். தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்க காலதாமதம் உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் நடைபெறுவதால் வாக்குறுதிகளை தவிர்க்கவும். வீண் அலைச்சல்களால் சொர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – கிழக்கு

அதிர்ஷ்ட எண் – 1

அதிர்ஷ்ட நிறம் – இளஞ்சிவப்பு

சிம்மம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு

அதிர்ஷ்ட எண் – 5

அதிர்ஷ்ட நிறம் – இளம்பச்சை

கன்னி

முயற்சிக்கேற்ற லாபம் உண்டாகும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பணியில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தாய்மாமன் உறவுகளால் லாபம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. இளைய உடன் பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட எண் – 6

அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்

துலாம்

தாய்வழி உறவினர்களால் சுப செய்திகள் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். எண்ணிய லாபம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை – மேற்கு

அதிர்ஷ்ட எண் – 4

அதிர்ஷ்ட நிறம் – இளம்சாம்பல்

விருச்சிகம்

கால்நடைகளால் எண்ணிய லாபம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சந்தேக உணர்வால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்கள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை – கிழக்கு

அதிர்ஷ்ட எண் – 8

அதிர்ஷ்ட நிறம் – இளநீலம்

தனுசு

பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளால் எண்ணிய லாபம் உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு

அதிர்ஷ்ட எண் – 3

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள் நிறம்

மகரம்

குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை – மேற்கு

அதிர்ஷ்ட எண் – 9

அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு நிறம்

கும்பம்

தொழிலில் நீங்கள் கையாளும் புதுவித யுக்திகளால் எண்ணிய வெற்றி கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட எண் – 5

அதிர்ஷ்ட நிறம் – பச்சை நிறம்

மீனம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய வேலையாட்களை நியமிப்பார்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட எண் – 7

அதிர்ஷ்ட நிறம் – பல வண்ண நிறங்கள்

Loading...

Related Posts

About The Author

Add Comment