சாய் பல்லவி மிஷ்கின் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் சாந்தனு நாயகனாக நடிக்க இருக்கும் நிலையில், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, நித்யா மேனன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

‘துப்பறிவாளன்’ படத்தை தொடர்ந்து மிஷ்கின் தற்போது சூப்பர் டீலக்ஸ், ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மிஷ்கின் அடுத்ததாக சாந்தனுவை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக நடிக்க சாய் பல்லவி மற்றும் நித்யா மேனனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த படத்தில் நடிப்பது குறித்து சாந்தனுவிடம் கேட்ட போது, இது எனது வாழ்நாளில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன் என்றார். மேலும் இந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ படமாக உருவாக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருப்பது குறித்து கேட்ட போது, அது ஒரு வதந்தி என்றும், இந்த படம் ஒரு வித்தியாசமான கதை என்றும் கூறினார்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Related Posts

About The Author

Add Comment