39 வயதில் திருமணம் செய்த இந்த நடிகை தற்போதைய நிலை தெரியுமா?..

இளைய தளபதி விஜய் நடித்த ரசிகன் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர் தான் நடிகை சங்கவி.
இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய நடிகை சங்கவியின் கவர்ச்சி தான் என்று பெரும்பாலானோர் கூறி வந்தனர்.
இவர் கடந்த 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார். இவரது உண்மையான பெயர் காவ்யா.

இதனை தொடர்ந்து விஜய்யுடன் மட்டும் ரசிகன், கோயமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.2010 வரை படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் அதன் பின்பு 39 வயதான சங்கவிக்கு கடந்த 2016 பிப்ரவரியில் தான் திருமணம் நடந்தது. இவரது கணவர் பெயர் வெங்கடேஷ். சங்கவி சமீபத்தில் கொளஞ்சி என்னும் தமிழ் படத்தில் நடித்துள்ளார்.மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சங்கவியின் பாட்டி கன்னடத்தின் பிரபல பழைய கதாநாயகி ஆர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

About The Author

Add Comment