விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, அப்படத்தின் நடிகர் சூர்யா இன்னோவா கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்த நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் சூர்யாவின் 2D என்டர்டைமன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது. விக்னேஷ் சிவனின் ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு இசையமைத்திருந்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைத்தார்.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம், வெளியான சில நாட்களில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா, தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு திடீரென இன்னோவா கார் ஒன்றை பரிசளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாக சிங்கம் 3 படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இயக்குனர் ஹரிக்கு, நடிகர் சூர்யா கார் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

Related Posts

About The Author

Add Comment