3 நிமிடங்கள் திடீர் அதிகரிப்பு..! அழிவின் அறிகுறியா.. பதற்றதில் மக்கள்.?

உலக அழிவைக்குறிக்கும் DOOMS DAY கடிகாரத்தின் முட்கள் மேலும் 3 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

உலக அழிவைக்குறிக்கும் விதத்தில் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்களால் கடந்த 1947ம் ஆண்டு முதல், கடிகாரம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கடிகாரத்தில் இரவு 11 மணி 53 நிமிடங்களைக் காட்டுமாறு நேரம் குறிக்கப்பட்டது.

இந்த கடிகாரத்தின் மணி சரியாக நள்ளிரவு பன்னிரண்டு எனக்குறிக்கப்பட்டால் உலகம் அழிந்துவிடும் எனப்பொருள். தொடர்ந்து அணு ஆற்றலைப் பயன்படுத்துதல், இயற்கைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுதல் போன்ற மனிதத்தவறுகள் மூலம் பூமிக்குப் பாதிப்புக்கள் அதிகமாகும் போது இக்கடிகாரத்தின் நேரத்தை அணு அறிவியலாளர்கள் மாற்றியமைத்து வருகின்றனர்.

இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட முறை இக்கடிகாரத்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கடிகாரத்தின் நேரத்தை இரவு 11 மணி 57 நிமிடங்களாக அணு அறிவியலாளர்கள் தற்போது மாற்றியுள்ளனர். இது உலக வாழ்க்கைக்கு ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.

Related Posts

About The Author

Add Comment