பிரபல பாலிவுட் நடிகர் அரிய வகை நோய் என்னவென்று வெளிப்படுத்தினார் !

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், நியூரோஎண்டாக்ரின் கட்டியின் பாதிப்பால் தான் அவதிப்படுவதாகக் கூறியுள்ளார்.

சிலநாள்களுக்கு முன்பு, தான் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இர்பான் கான் ட்விட்டரில் அறிவித்தார். இதனால் பாலிவுட் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த நோயின் விவரம் குறித்து அவர் அறிவித்துள்ளார். நியூரோஎண்டாக்ரின் கட்டியின் பாதிப்பால் தான் அவதிப்படுவதாகக் கூறியுள்ளார். அவர் ட்வீட்டில் உள்ள மேலதிகத் தகவல்:

அனைவருடைய பிரார்த்தனைகளும் எனக்கு நம்பிக்கையளிக்கிறது. இதன் சிகிச்சைக்காக நான் வெளிநாடு செல்லவேண்டியுள்ளது. எனக்கு நீங்கள் தொடர்ந்து உங்கள் வாழ்த்துகளை அனுப்பிக்கொண்டிருங்கள். வதந்திகளில் உள்ளபடி நியூரோ என்பது மூளை சம்பந்தப்பட்ட நோயல்ல. கூகுள் வழியாக என்னவென்று சுலபமாகத் தெரிந்துகொள்ளலாம். என் வார்த்தைகளுக்காகக் காத்திருப்பவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன் – திரும்ப வந்து நிறைய கதைகளைச் சொல்வேன் என நம்பிக்கை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

1988-ல் சலாம் பாம்பே படம் மூலம் அறிமுகமான 51 வயது இர்பான் கான், நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தி அமேசிங் ஸ்பைடர்மேன், ஜுராசிக் வேர்ல்ட், லைஃப் ஆஃப் பை ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற ஆங்கிலப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக 2012-ல் தேசிய விருது பெற்றார். இவர் சமீபமாக நடித்துள்ள பிளாக்மெயில் என்கிற படம் ஏப்ரல் 4 அன்று வெளிவரவுள்ளது.

Related Posts

About The Author

Add Comment