கபாலி நாயகி பாலியல் தொல்லை கொடுத்த நடிகருக்கு பளார் விட்டார்

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே சமீபத்திய டி.வி பேட்டி ஒன்றில் தமிழ் மொழிகளில் நடிக்கும் போது தனக்கும் அப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். அங்கு முதல் நாள் படப்பிடிப்பிலேயே பிரபலமான அந்த நடிகர் எனது காலைத் தடவினார்.

கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே கபாலி படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகத்திலும் பிரபலமானார்.

திரையுலகில் நீண்ட நாட்களாகவே நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளது. சமீப காலமாக கேஸ்டிங் கௌச் என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டது. ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தர வேண்டு மென்றால் நடிகைகள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என பல நடிகைகள் குற்றம் சாட்டினர். பல பிரபலமான நடிகைகள் கூட தங்களுக்கும் அப்படிப்பட்ட அனுபவம் நேர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே சமீபத்திய டி.வி பேட்டி ஒன்றில் தமிழ் மொழிகளில் நடிக்கும் போது தனக்கும் அப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். அங்கு முதல் நாள் படப்பிடிப்பிலேயே பிரபலமான அந்த நடிகர் எனது காலைத் தடவினார். நான் கோபமடைந்து அவரை அடித்துவிட்டேன் என அந்தப் பேட்டியில் ராதிகா தெரிவித்துள்ளார்.

ராதிகா ஆப்தே தென்னிந்திய மொழிப் படங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் முதன் முதலில் தெலுங்கில் ரக்த சரித்திரா படத்தில் நடித்துள்ளார். அதன் பின் பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி படத்தில் நடித்திருக்கிறார். தனது பேட்டியில் அந்த நடிகர் யார் என்பதை ராதிகா சொல்லவில்லை. அதனால் அவரிடம் அடி வாங்கிய அந்த பிரபல நடிகர் யார் என்பதும் புரியவில்லை

Related Posts

About The Author

Add Comment