இப்படி ஒரு மனைவி இருந்தால் வாழ்கையே சொர்க்கம்தான்…

பிடிவாத குணமுடைய பெண்களுடன் குடும்பம் நடத்துவது கடினம் என ஓர் பொதுவான கருத்து ஆண்கள் மத்தியில் நிலவும். ஆனால், இது தவறு. ஓர் சிறந்த மனைவியாக திகழும் தன்மை இவர்களிடம் இருக்கிறது. ஆம், இவர்களது பிடிவாதம் பொருட்கள் வாங்குவதில் மட்டும் இருக்காது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதிலும் இருக்கும்.

கணவன் சோர்வடையும் போது தேற்றிவிடுவதில் இருந்து, ஊக்கமளிப்பது, உதவுவது, தன்னம்பிக்கை அளிப்பது என ஓர் நல்ல இல்லத்தரசியாக திகழ தேவைப்படும் அனைத்து குணாதிசயங்களும் பிடிவாத குணம் உடைய பெண்களிடம் இருக்கும்.

காரணம் #1 தனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்பதில் பிடிவாத குணமுடைய பெண்கள் சரியாக இருப்பார்கள். வேண்டாதவை மீது ஆசைப்பட மாட்டார்கள், வேண்டுவதை விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். மேலும், இவர்கள் ஒரு விஷயத்தின் மேல் வைக்கும் காதல் மிக நேர்மையாகவும், தீர்க்கமாகவும் இருக்கும்.

காரணம் #2 பிடிவாத குணமுடைய பெண்கள் உணர்வு ரீதியானவர்கள். அழுதாலும், கோபப்பட்டாலும், அன்பு காட்டினாலும் என எதுவாக இருப்பினும் முழுமனதுடன் வெளிப்படுத்தும் குணம் இவர்களிடம் இருக்கும்.

காரணம் #3 ஊக்கம்! நீங்களே சோர்வுற்றாலும், இவர்கள் ஊக்கமளித்து உங்களை முன்னேறி செல்ல அழுத்தம் தந்து முன்னேற உதவுவார்கள். பிடிவாதம் என்பதை தாண்டி ஓர் செயலில், சொல்லில் நிலையாக இருக்கும் பண்பு இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

காரணம் #4 உண்மையான பேச்சு! உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமால். நேர்மையாக, முகத்திற்கு நேராக பளிச்சென்று பேசிவிட்டு சென்றுவிடுவார்கள். இதனால், சண்டைகள் எழலாம், ஆனால், அது உடனடி தீர்வுடன் சுபமாக முடிந்துவிடும். கோவில் மணியோசை போல எதிரொலித்து கொண்டே இருக்காது

காரணம் #5 சுவாரஸ்யமானவர்க்கள்! பிடிவாத குணம் இருப்பினும் கூட, சின்ன சின்ன சண்டைகள், சச்சரவுகள், கடுமையான நேரத்தில் கவலைகள் மறக்க செய்யும் இவர்களது லூட்டிகள் சற்றே சுவாரஸ்யமானதாக இருக்கும்.

காரணம் #6 பிடிவாதம் இருக்கும் அதே அளவிற்கு இவர்களிடம் அனுதாபமும் இருக்கும். சூழ்நிலை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப தங்களது ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்பை அதிகரித்தும் கொள்வார்கள், குறித்தும் கொள்வார்கள்.

காரணம் #7 தன்னம்பிக்கை! ஒரு விஷயத்தில் நிலைபெற்று அதை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கும் இவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். இதனால், இவர்கள் உங்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நடந்துக் கொள்வார்கள்.

காரணம் #8 ஆர்வம்! நினைத்ததை அடையவேண்டும் என்ற இவர்ளது பேரார்வம் வேலை, மற்றும் இல்வாழ்க்கை விஷயங்களிலும் கூட தொடரும். இதனால், எந்த திட்டத்தை நிறைவேற்றுவதில், வீடு, பொருட்கள் , சேமிப்பு போன்றவற்றிலும் கூட இவர்கள் சீராக நடந்துக் கொள்வார்கள்.

Related Posts

About The Author

Add Comment