இதோ பங்குனி மாத ராசிபலன்கள்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தெரியுமா?

தமிழ் மாதம் பங்குனியில் 15-03-2018 முதல் 13-04-2018 வரையிலான பன்னிரெண்டு ராகளுக்கான ராசிபலன்கள் இதோ,

மேஷம்இந்த மாதத்தில் குரு பகவானின் அதிசார சஞ்சாரத்தால் செய்து முடிக்க வேண்டிய காரியங்களில் ஒரு சில இடைஞ்சல்களை சந்திக்க உள்ளீர்கள். எளிதாக நடந்து முடிந்துவிடும் என்று எண்ணிய காரியங்கள் சற்றே இழுபறியைத் தரக்கூடும்.எடுத்த காரியத்தை நடத்தி முடிக்கும் வரை மன உளைச்சல் அதிகமாகக்கூடும். அதே நேரத்தில் குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருவீர்கள்.பொருள் வரவு நிலைக்கும் எவ்வித குறையும் இருக்காது. பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள்.சோதனைக்குரிய காலத்திலும் மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு வரும் நீங்கள் பங்குனி மாதத்தின் மூன்றாவது வார இறுதியில் எதிர்பார்க்கும் வெற்றியை அடைவீர்கள்.உடன் பிறந்தோரால் ஒரு சில சங்கடத்தினை சந்திக்க நேரலாம். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கக் கூடும். அவ்வப்போது திடீர் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு.மாணவர்கள் தேர்வினில் கேள்விகளைப் புரிந்து கொண்டு விடையளிக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளால் ஒரு சில செலவினங்கள் உருவாகும்.உடல்நிலையில் அவ்வப்போது தோன்றும் சிறுசிறு பிரச்னைகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் கவனித்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள்.ஒரு சில குடும்பப் பிரச்னைகளுக்கு அவர் மூலமாகத் தீர்வு காண்பீர்கள். முன்பின் பழக்கமில்லாத நபர்களுக்கு உதவி செய்வதால் ஒரு சில உபத்திரவங்களுக்கு ஆளாக நேரிடும்.கலைத்துறையினர் தொழில் ரீதியாக கூடுதல் அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். 12ம் இடம் வலுப்பெறுவதால் சோதனைகளைத் தாண்டி சாதிக்க வேண்டிய மாதமாக அமையும்.சந்திராஷ்டம நாட்கள் – ஏப்ரல் 4, 5.பரிகாரம் – வியாழன்தோறும் வடக்கு முகமாக நெய்விளக்கேற்றி வைத்து குருபகவானை வழிபட்டு வாருங்கள்.

ரிஷபம்ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதத்தின் துவக்கத்தில் உச்ச பலத்துடன் அமர்ந்திருப்பதால் உங்கள் பணிகள் எளிதாக நடந்தேறக் காண்பீர்கள்.கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்து வந்த விவகாரங்கள் இந்த மாதத்தில் முடிவிற்கு வரும். எதிர்காலத்தில் செய்ய உள்ள பணிகளுக்கான திட்டமிடுதலில் ஈடுபடுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். பொருள் வரவு நிலை சீராக இருந்து வரும். சேமிப்புகளில் நாட்டம் அதிகரிக்கும்.உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களுடன் உண்டாகும் கருத்து வேறுபாட்டினை பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது.வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கக் கூடும். மார்ச் மாதத்தின் இறுதியில் அநாவசியமான பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது.செல்போன், இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களால் ஒரு சில தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். தாயார் வழி சொத்துக்களால் ஆதாயம் காண்பீர்கள்.மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எதிர்கொள்வர். கலைத்துறையினரின் கற்பனைகள் எல்லோரின் பாராட்டினைப் பெறும். பிள்ளைகளால் பெருமைகொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும்.அவ்வப்போது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்கள் வெற்றிக்கு கூடுதல் வலு சேர்க்கும். செலவுகள் சற்று கூடுவதால் லேசான மன வருத்தம் தோன்றும்.அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும், இயலாதவர்களுக்கு தான தர்மங்கள் செய்வதிலும் மனநிம்மதி காண்பீர்கள். அவ்வப்போது எட்டிப்பார்க்கும் முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது.முன்னோர்கள் பற்றிய எண்ணங்கள் மனதில் தலைதூக்கும். தொழில்நிலையில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், தனக்குரிய சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் மனதினை ஆட்கொள்ளும். வியாபாரிகள் மாதத்தின் முற்பாதியில் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைவார்கள். ஏப்ரல் மாதத்தின் முற்பாதியில் எல்லா விவகாரங்களிலும் நிதானித்து செயல்படுவது நல்லது. ஆதாயம் தரும் பலன்களைக் காணும் மாதமாக அமையும்.சந்திராஷ்டம நாட்கள் – ஏப்ரல் 6, 7, 8பரிகாரம் – வெள்ளிதோறும் கோபூஜை செய்து வழிபடவும்.

மிதுனம்சென்ற மாதத்தைப்போலவே, 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானம் இந்த மாதமும் வலுப்பெற்று காணப்படுவதால் செய்யும் தொழிலில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள்.வாழ்வியல் நிலையை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் உங்கள் செயல்பாடுகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு பணியிலும் உங்களுக்குரிய கௌரவத்தினை அடைவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.பொருளாதார நிலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், ஏதோ ஒரு வகையிலான பண வரவு செலவுகளை சமாளிக்க வைக்கும். குடும்பத்தில் சிறுசிறுசல சலப்புகளுடன் மகிழ்ச்சி நிலவி வரும்.முன்பின் தெரியாத நபருக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் நன்மையைத் தரும்.வண்டி, வாகனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயனளிக்கும். தாயார் வழி உறவினர்களால் ஆதாயம் காண்பீர்கள். மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வினை எதிர்கொள்வர்.பிள்ளைகளால் பெருமிதம் கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். உங்கள் சிந்தனைகள் மற்றவர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பினையும், மரியாதையையும் பெற்றுத் தரும்.சிறுசிறு கடன்சுமைகளை தீர்க்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு உறுதுணையாய் இருந்து செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவப்போய் தேவையற்ற பிரச்னையை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.கௌரவச் செலவுகள் அதிகரிக்கக் கூடும். மாதத்தின் பிற்பகுதியில் ஆன்மிகப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. கலைத்துறையினர் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள்.உத்யோகஸ்தர்கள் அலுவலக நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் காண்பார்கள். சுயதொழிலசெய்வோர் கடும் உழைப்பினை வெளிப்படுத்தி அதற்கான பயனையும் இந்த மாதத்திலேயே அடைவார்கள். உழைப்பினால் உயரவேண்டிய நேரம் இது.சந்திராஷ்டம நாட்கள் – ஏப்ரல் 9, 10.
பரிகாரம் – ஞாயிறுதோறும் சரபேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.

கடகம்இந்த மாதத்திய கிரஹ நிலை உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் ராகுவின் துணையால் எண்ணிய காரியங்களை சிறப்பாக நடத்தி முடித்து நற்பெயர் கண்டு வருவீர்கள்.திட்டமிட்ட பணிகள் செவ்வனே நடந்தேறும் நேரம் இது. எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக அணுகாமல் தீவிரமாக ஆராய்ந்து செயல்படுவதில் அதிக அக்கறை கொள்வீர்கள்.இதுநாள் வரை தடைபட்டிருந்த தனலாபமானது மெதுவாக வரத்துவங்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரத் துவங்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் மிகுந்த சிரத்தை கொள்வீர்கள்.குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதில் உங்களின் பொறுப்பான பணிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறும்.உறவினர்களுடனான சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். மாணவர்கள் ஆசிரியர்களின் துணையுடன் எதிர்பார்த்த வெற்றியினை அடைவார்கள். பிள்ளைகளின் வாழ்வியல் தரத்தினை உயர்த்துவதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவீர்கள்.உங்கள் பணிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக செயல்பட்டு வருவார். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.கலைத்துறையினர் ஒரே நேரத்தில் பலவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதையும் மிகுந்த ஈடுபாட்டோடு செய்வதால் உத்யோக ரீதியாக அலுவலகத்தில் நற்பெயரோடு பதவி உயர்விற்கான வாய்ப்பையும் காண்பீர்கள்.வியாபாரிகள் அதிக அலைச்சலை சந்தித்தாலும் சிறப்பான தனலாபத்தினை அடைவார்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள் – மார்ச் 15, 16, ஏப்ரல் 11,12, 13.பரிகாரம் – திங்கட்கிழமை தோறும் ராகு கால வேளையில் துர்கையை வழிபட்டு வரவும்.

சிம்மம்இந்த மாதத்தில் ராசிநாதன் சூரியன் எட்டாம் இடத்தில் அமர்வதால் சற்று சிரமமான சூழலை சந்திக்க நேரலாம். நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருப்பதால் சற்று மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.திட்டமிட்ட பணிகள் அதன்படி நடைபெற இயலாத சூழல் தோன்றக்கூடும். இந்த நேரத்தில் எந்த ஒரு விஷயத்திலும் அதிகம் உணர்ச்சிவசப்படாது லேசாக எடுத்துக் கொள்வது நல்லது.வாக்கினில் நம்மையும் அறியாமல் வெளிப்படும் வார்த்தைகளுக்கு அடுத்தவர்களால் ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கப்படும் என்பதால் கவனத்துடன் பேச வேண்டியது அவசியம்.பொருளாதார ரீதியாக சற்று சிரமமான சூழல் நிலவி வரும். கையிருப்புகள் கரையத் தொடங்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றும்.தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பிரச்சினையைத் தரும் வகையில் அமையும். உடன்பிறந்தோரால் சங்கடங்கள் உருவாகக் கூடும்.முன்பின் தெரியாத முற்றிலும் புதிய நபர்களை நம்பி எந்தச் செயலிலும் இறங்கக் கூடாது. இந்த மாதத்தில் தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது.மாணவர்கள் பதட்டமின்றி நிதானத்துடன் தேர்வினை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மனதில் அநாவசிய குழப்பத்தினைத் தோற்றுவிக்கும்.பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்கு மிகுந்த சிரமப்படுவீர்கள்.மூட்டு வலி மற்றும் எலும்பு சார்ந்த பிரச்னைகளால் உடல்நிலையில் சிறிது சிரமத்தினைக் காண நேரிடலாம். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும்.கலைத்துறையினர் தங்கள் முயற்சியில் எதிர்பாராத தடங்கலைச் சந்திப்பர். முடிந்தவரை அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.பிதுரார்ஜித சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உருவாகலாம். தொழில்ரீதியாக சிறப்பான உழைப்பினை வெளிப்படுத்தி நற்பெயரைக் கண்டாலும், எதிர்பார்த்த தன லாபம் அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.சிரமங்களை எதிர்கொண்டு வெற்றி காணவேண்டிய நேரம் இது.சந்திராஷ்டம நாட்கள் – மார்ச் 17, 18, 19.
பரிகாரம் – வியாழன்தோறும் கருடாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.

கன்னி
இந்த மாதத்தில் உங்கள் பணிகள் நிறைவேற அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் தனித்து செயல்பட இயலாத சூழல் தோன்றலாம்.மிகவும் நம்பியிருந்த நபர் ஒருவர் முக்கியமான நேரத்தில் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக செயல்படுவதால் சற்று மன வருத்தம் தோன்றக்கூடும்.தனாதிபதி உச்ச பலத்துடன் இருப்பதால் பொருள் வரவிற்கு சிறிதும் குறைவிருக்காது. குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவீர்கள்.உடன்பிறந்தோரால் கூடுதலான செலவுகளை சந்திக்க நேரிடலாம். தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து சிரமத்தினைத் தரக்கூடும். முன்பின் தெரியாத மனிதர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டியது அவசியம். குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் வாய்ப்பு உருவாகும்தாயார் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.மாணவர்கள் மனதில் தோன்றும் சந்தேகங்களுக்கு உடனடியாகத் தெளிவு பெறுவது நல்லது. பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி மனதிற்கு நிம்மதியைத் தருவார்கள். நரம்பியல் சார்ந்த தொந்தரவுகளால் உடல்நிலையில் சிரமம் காண நேரிடும்.வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்பட்டு வருவீர்கள். நண்பர்களோடு திடீர் விரோதம் தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு.கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் உண்டு. கலைத்துறையினர் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கப் பெறுவார்கள்.தொழில்முறையில் மாதத்தின் துவக்கத்தில் போட்டியான சூழலை சந்தித்தாலும் இரண்டாவது வாரத்தில் இருந்து ஏறுமுகத்தினைக் காண்பீர்கள். சரிசம பலனைத் தரும் மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள் – மார்ச் 20, 21பரிகாரம் – தினந்தோறும் துளசிச் செடிக்கு நீருற்றி மூன்று முறை வலம் வந்து வணங்கி வாருங்கள்.

துலாம்
இந்த பங்குனி மாதத்தின் துவக்கத்தில் ராசிநாதன் சுக்கிரன் உச்ச பலத்துடன் அமர்ந்திருந்தாலும் ஆறாம் இடத்தில் இருப்பதால் சற்று சிரமத்தினை எதிர்கொள்ள நேரிடலாம்.எளிதில் முடிந்துவிடும் என்று எண்ணும் காரியங்கள் இழுபறியைத் தரும். முடிந்தவரை அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.மிகவும் நெருங்கிய நபர் ஒருவர் எதிர்பார்ப்பிற்கு மாறாக செயல்படுவதால் மன வருத்தம் கொள்வீர்கள். மனதில் தோன்றும் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்வதில் அவசரம் காட்டாது நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.நீங்கள் அவசரப்பட்டு செய்யும் செயல்களில் இழப்புகளோடு தேவையற்ற பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.தனாதிபதியின் சாதகமான சஞ்சாரம் ஏதேனும் ஒரு வகையில் பொருள் வரவினை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும். நெடுநாளைய கடன் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.புதிதாக கடன் வாங்குவதை சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்பு நிலவி வரும். உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள்.வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதத்தில் அநாவசிய பிரயாணங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மாணவர்கள் எழுத்துத்திறனில் கவனம் செலுத்துவது நல்லது.பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். உஷ்ண உபாதையால் அவதிப்படும் வாய்ப்பு உண்டு என்பதால் உடல்நிலையில் கவனம் தேவை.வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குத் துணையிருப்பார். நண்பர்களுடனான சந்திப்பு மனதிற்கு நிம்மதியைத் தரும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கக் கூடும்.குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலைக்கு வாங்கும் சூழல் தோன்றலாம். தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவீர்கள்.கலைத்துறையினர் கடுமையான போட்டியினை சந்திப்பர். கனவுத் தொல்லைகளால் நிம்மதியான உறக்கம் கெடலாம். சரிசம பலன்களைக் காணும் மாதமாக அமையும்.சந்திராஷ்டம நாட்கள் – மார்ச் 22, 23.
பரிகாரம் – சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திர நாளில் நரசிம்மரை வழிபட்டு வாருங்கள்.

விருச்சிகம்
ராசிநாதன் செவ்வாயின் சாதகமான சஞ்சாரம் தொடர்வதால் எண்ணிய காரியங்களை ஏதேனும் ஒரு வழியில் நடத்தி முடிப்பீர்கள்.சிந்தனையில் வெளிப்படும் கருத்துக்கள் உண்மையை உணர்த்துவதால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். மனதில் தோன்றுவதை மிகவும் பக்குவமாகப் பேசி அடுத்தவர்களுக்கு புரிய வைத்து வெற்றி காண்பீர்கள்.அதிசார குருபகவானின் ஜென்ம சஞ்சாரம் உங்கள் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும். எதிர்காலம் சார்ந்த திட்டங்களை மனதிற்குள் வகுத்து வருவீர்கள்.ஏழரை சனியின் சாதகமற்ற நிலை பொருளாதார ரீதியாக சிறிது சிரமத்தினைத் தந்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் பொருள்வரவு இருந்து வரும்.வார்த்தைகளில் ஒருசில நேரத்தில் நம்மையும் அறியாமல் கடுமை வெளிப்படலாம். ஆயினும் அதனால் உண்டாகும் பிரச்னைகளை சமாளிக்கும் கலையை அறிந்திருப்பீர்கள்.உடன்பிறந்தோரை ஒரு சில விஷயங்களுக்கு சார்ந்திருக்க வேண்டி வரும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் மிகுந்த பயனைத் தரும்.தொலைதூரப் பிரயாணங்கள் அனுகூலமாக அமையும். உறவினர்கள் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். மாணவர்கள் மனப்பாடத்திறனை உயர்த்திக்கொள்ள முயற்சிப்பது நல்லது.பிள்ளைகளின் சாதனைகளைப் பற்றி பேசுவதில் பெருமிதம் கொள்வீர்கள். மார்ச் மாதத்தின் பிற்பாதியில் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டிய வாய்ப்பு உள்ளதால் சம்பந்தமில்லாமல் அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணை உங்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவார்.தொழில் முறையில் கடும் போட்டியினை சந்திக்க நேர்ந்தாலும், அதிக சிரத்தையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.கலைத்துறையினர் ஏப்ரல் மாதத்தில் கடுமையான போட்டியினை சந்திப்பர். சுயதொழில் செய்வோர் புதிய முயற்சிகளை சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது. சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள் – மார்ச் 24, 25.பரிகாரம் – பங்குனி உத்திரத் திருநாள் அன்று அருகில் உள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்யுங்கள்.

தனுசு
அதிசாரம் பெற்ற ராசிநாதன் குரு பகவானின் 12ம் இடத்துச் சஞ்சாரமும், ஜென்மச் சனியின் சஞ்சாரமும் தொடர்ந்து கொண்டிருப்பதால் இந்த மாதம் சற்று சோதனையைத் தரும் வகையில் அமைகிறது.அஷ்டமத்து ராகுவும் ஒரு சில இடைஞ்சல்களைத் தோற்றுவிப்பார்.தன்னலம் அற்ற பொதுக்காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் தனிப்பட்ட முறையில் உங்களின் கௌரவம் உயர்வடையும்.தன ஸ்தானத்தில் கேது சஞ்சரித்தாலும் பொருள் வரவிற்குக் குறைவிருக்காது. சேமிப்புகள் சீரடையும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும்.உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில் முறையில் மிகுந்த உதவியாக இருக்கும்.நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்களை பேச்சினில் வெளிப்படுத்தாது எழுத்தின் மூலம் வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். பங்குனி மாதத்தின் முதல் இரண்டு வாரத்திற்குள் அடிக்கடி பிரயாணம் செய்ய நேரிடலாம்.வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். தகப்பனார் வழி உறவினர்களின் துணையோடு குடும்பப் பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள்.வித்யாஸ்தானத்தின் வலிமையால் மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்வார்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்களை பெருமிதம் கொள்ளச் செய்யும். அவர்களது வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பு உருவாகும்.முன்பின் தெரியாத பெண்களுக்கு உதவி செய்யப்போய் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய்த் துணை நிற்பார். பிதுரார்ஜித சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்பு உண்டு.தொழில்முறையில் உங்களின் செயல்பாடுகள் துவக்கத்தில் நிதானமாகவும், போகப்போக அசுர வேகத்திலும் அமையும். கலைத்துறையினர் எதிர்பார்த்த விருதுகள் வந்து சேரும்.கனவுத் தொல்லையால் நிம்மதியான உறக்கம் கெடலாம். சரிசம பலன்களைத் தரும் மாதமாக அமையும்.சந்திராஷ்டம நாட்கள் – மார்ச் 26, 27.பரிகாரம் – வியாழன்தோறும் குரு மகான்களை வழிபட்டு வாருங்கள்.

மகரம்ஏழரைச்சனியின் பலமும், ஜென்ம ராசியில் கேதுவின் சஞ்சாரமும் உங்கள் மனநிலையை சோதிக்கும். கிரஹங்களின் சாதகமற்ற நிலை தொடர்ந்தாலும் மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.சுற்றியுள்ளோரால் ஒரு சில தொல்லைகளை சந்திப்பீர்கள். பொறாமைக்காரர்களையும், போட்டியாளர்களையும் உங்களின் உண்மையான உழைப்பின் மூலம் ஓரங்கட்டி விடுவீர்கள்.அயராத உழைப்பில் சுகம் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் பொருள் வரவு என்பது தடையில்லாமல் இருக்கும்.எந்த ஒரு விஷயத்திலும் அதிகம் பேசாது அமைதி காத்து வருவது நல்லது. உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த நன்மை உண்டாகும். பங்காளிகளுக்குள் இருந்து வரும் கருத்து வேறுபாடு நீங்கும்.தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதில் செயலிழந்து போனாலும் இரவு நேரத்தில் பயன் தரும் வகையில் செயல்பட்டு நன்மை தரும்.உறவினர்களுடன் உரையாடுவதால் குடும்பத்தின் பாரம்பரியப் பெருமையை அறிந்து கொள்வீர்கள். வண்டி, வாகனங்களை இயக்கும்போதும், பிரயாணத்தின்போதும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.மாணவர்களின் எழுத்து வேகம் அதிகரிக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவர்களது விருப்பத்திற்காக சுற்றுலா செல்ல திட்டமிட நேரிடும். கேளிக்கை, கொண்டாட்டங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடலாம்.குடியிருக்கும் வீட்டினில் செய்ய நினைக்கும் ஆல்ட்ரேஷன் பணிகளை சிறிது காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். தொழில்முறையில் உங்களது எண்ணங்களை நடைமுறைப்படுத்தி சோதித்துப் பார்க்க கால நேரம் சாதகமாக அமையும்.கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட கால நேரம் கூடி வரும். சுயதொழில் செய்வோர் மனம் தளராது செயல்பட வேண்டியது அவசியம். சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி காணும் மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள் – மார்ச் 28, 29.பரிகாரம் – அரசமரத்தடி நாகருக்கு அபிஷேகம் செய்து வணங்கி வாருங்கள்.

கும்பம்ராசிநாதன் சனி பகவானும்இன்னபிற கிரஹங்களும் சாதகமாக சஞ்சரிப்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. மனதில் விதவிதமான ஆசைகள் தோன்றினாலும், நல்லது கெட்டது அறிந்து செயல்படுவீர்கள்.தனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கிரஹங்களின் நிலை பொருளாதார நிலையை வலுப்படுத்தும். பல்வேறு வழிகளில் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும்.குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றினாலும் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பிரச்னைக்குரிய விஷயங்களில் உங்களின் புத்தி சாதுர்யத்தோடு திறமையான வாக்கு சாதுர்யமும் இணைவதால் வெற்றி காண்பீர்கள்.எந்த ஒரு விஷயத்தையும் சாமர்த்தியமாக அணுகி சாதகமாக்கிக் கொள்வீர்கள்.உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்பட்டு வருவார்கள். உங்கள் பணிகளில் தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கிய இடத்தினை வகிக்கும். புதிய வண்டி, வாகனங்கள் சேரும் வாய்ப்பு உள்ளது.

பிள்ளைகளின் பெயரில் சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீடு, மனை, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும் நேரம் இது. மாணவர்களின் பொது அறிவுத்திறன்உயரும்.வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். நண்பர்களோடு இணைந்து செயல்படும் விவகாரங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றி உண்டாகும்.வீண் விரயத்தினைத் தவிர்த்து செலவினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டு வருவீர்கள். பூர்வீக சொத்துக்கள் தக்க நேரத்தில் உதவிகரமாய் அமையும்.தொழில்முறையில் பிறரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறதே என்ற ஏக்கம் மனதில் நிலவி வந்தாலும் உங்களின் சிறப்பான செயல்பாடுகள் தனித்துவத்தை வெளிப்படுத்தும்.சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தின் மூலம் தங்கள் எண்ணத்தினை நிறைவேற்றிக் கொள்வார்கள். சாதகமான பலன்களை சந்திக்கும் மாதம் இது.சந்திராஷ்டம நாட்கள் – மார்ச் 30, 31, ஏப்ரல் 1.பரிகாரம் – ஏழுமலையானை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வாருங்கள்.

மீனம்இந்த பங்குனி மாதம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. இந்த பங்குனியின் முற்பாதியில் கௌரவமும், பிற்பாதியில் வருமானமும் உயரக் காண்பீர்கள்.
பிரச்னைக்குரிய நேரத்தில் உங்களின் விவேகமும், நிதானமும் நிறைந்த செயல்பாடுகள் கௌரவத்தை உயர்த்தும். வெளியில் விட்டுக் கொடுத்துச் செல்வது போல் தோன்றினாலும் உங்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.அடுத்தவர்களின் எண்ண ஓட்டத்தைப் பற்றி கவலை கொள்ளாது தனக்கு சரியெனத் தோன்றுவதை பேசி வருவதால் ஒரு சிலரிடம் கருத்து வேறுபாடு கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி இடம்பிடிக்கும்.பொருளாதார ரீதியாக சந்தித்து வந்த சிரமங்கள் குறையும். அதே நேரத்தில் புதிதாக கடன் வாங்குவதை சிறிது காலத்திற்குத் தள்ளி வைப்பது நல்லது.உடன்பிறந்தோர் முக்கியமான நேரத்தில் துணை நிற்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் அமையும். பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் எதிர்பாராத பிரயாணத்தினை சந்திக்க நேரிடும். மாணவர்கள் உற்சாகத்தோடு தேர்வினை எதிர்கொள்வார்கள்.பிள்ளைகள் உங்களது எதிர்பார்ப்பினை நிறைவேற்றவில்லையே என்ற ஏக்கம் மனதின் மூலையில் இருந்து வரும்.ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய்த் துணை நிற்பார்.அநாவசிய செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.தொழில்முறையில் புதிய திருப்பத்திற்கான அறிகுறிகளைக் காணத் துவங்குவீர்கள். கலைத்துறையினரின் படைப்புகள் மிகச்சிறந்த வரவேற்பினைப் பெறும்.சுயதொழில் செய்வோர் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருவார்கள். கடந்த சில மாதங்களை விட இந்த மாதம் முன்னேற்றம் தரும் வகையில் அமையும்.சந்திராஷ்டம நாட்கள் – ஏப்ரல் 2, 3.பரிகாரம் – ஸ்ரீராமநவமி நாளில் அருகிலுள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.

Related Posts

About The Author

Add Comment