அப்பாஸின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?இத படிங்க!

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ், இவர் 1975ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிறந்தவர் . நடிகர் அப்பாஸின் உண்மையான பெயர் மிர்சா அப்பாஸ் அலி . இவர் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து விட்டார் குறிப்பாக தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கொல்கத்தாவில் பிறந்து, மும்பையில் படித்து, பெங்களூரில் நடிக்கத் தொடங்கியவர். இவருடைய குடும்பம் பாலிவுட் நடிகர் பேரொஸ் கானுக்கு சொந்த முறையாகும். இதனால் ஆரம்ப காலனகளில் எளிதாக பட வாய்ப்புகள் கிடைத்தது. அதனையும் இவர் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு நல்ல படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் சிறு வயதில் இருந்தே வட இந்திய மொழி படங்களை பார்த்து தான் வளர்ந்தார், குறிப்பாக ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வந்தார் . தனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.அப்போது தமிழ் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார். அப்போது தனது நண்பர்கள் சிபாரிசு மூலம் சினிமா துறைக்கு வந்தவர் தான் அப்பாஸ்.

1996ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் அப்பாஸ். தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ், அதன் பின்னர் மிகப்பெரிய நடிகராக பார்க்கப்பட்டார்.

இவர் பின்னர் காதல் வைரஸ், இனி எல்லாம் சுகமே, கண்ணெழுதி தொட்டும் பொட்டு படையப்பா, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் அப்போது விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளையும் சேர்த்து 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் .

இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது.தற்போது அப்பாஸ் டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் மக்களுக்கு தனது முகம் மறந்து விட கூடாது என்பதற்காக இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதாக கூறியுள்ளார்.

Loading...

Related Posts

About The Author

Add Comment