மும்பையில் ரகசிய திருமணம்?காதலரை மணந்த ஸ்ரேயா!

நடிகை ஸ்ரேயா-ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் திருமணம் மும்பையில் ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

தமிழ் சினிமாவில் “எனக்கு 20 உனக்கு 18” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து மழை, சிவாஜி, கந்தசாமி, அழகிய தமிழ்மகள், திருவிளையாடல், ஆரம்பம், தோரணை உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ரஜினி, விக்ரம் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இது தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவரும் ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கொஸ்சீவ்வும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். ஆண்ட்ரே பல ரெஸ்டாரண்ட்களையும் நடத்தி வருகிறார். சில வருட காதலுக்குப் பிறகு இவர்கள் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தனர். மேலும் இவர்களது திருமணம் மார்ச் மாதம் 17, 18, 19ஆகிய தேதிகளில் திருமணம் நடக்க இருப்பதாகத் ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை ஸ்ரேயா மறுத்தார்.

இந்நிலையில் அவர் திருமணம் ரகசியமாக நடந்துவிட்டதாக மும்பை ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கின்றது. கடந்த 12-ம் தேதி மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரேயாவின் வீட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்ததாகவும், இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Posts

About The Author

Add Comment