சினிமாவின் அறியப்படாத ’12’ உண்மைகள்…

சில்க் ஸ்மிதா-ரம்பா
கோலிவுட்டைக் கலக்கிய நடிகைகள் சில்க் ஸ்மிதா,ரம்பா இருவரின் சொந்தப் பெயரும் ‘விஜயலட்சுமி’ தான்.

நாயகன்-அக்னி நட்சத்திரம்
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களான ‘நாயகன்-அக்னி நட்சத்திரம்’ படங்களின் ஷூட்டிங்கை, இயக்குநர் மணிரத்னம் ஒரே நேரத்தில் நடத்தினார். கமல்ஹாசன், கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்கள் மேலே சொன்ன 2 படங்களிலும் நடித்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி-ஆண்டவன் கட்டளை
ஆரம்ப காலத்தில், நடிகர் விஜய் சேதுபதி கூத்துப்பட்டறை மேனேஜராகப் பணியாற்றினார்.அதேபோல நிஜத்திலும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நாடகக்கம்பெனி மேனேஜராக, விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயன்-அருண்பிரபு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனும், ‘அருவி’ என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களிடம் நன்கு பரிச்சயம் ஆகிவிட்ட இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனும், நெருங்கிய உறவினர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

கந்தசாமி’கந்தசாமி’ என படத்தின் பெயர் வைக்கப்பட்டதால், நடிகர் விக்ரம் தொடங்கி மொத்த படக்குழுவினரும் படப்பிடிப்பு முடியும்வரை சைவ உணவுகளையே உண்டனராம்.

சூப்பர்ஸ்டார்’ ஸ்ரீதேவி
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்கள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆகிய 6 நடிகர்களுடனும் நடித்தவர் என்ற பெருமை மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு உண்டு.வேறு எந்தவொரு நடிகையும், இதுவரை இந்த சாதனையை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளவந்தான்
ஹாலிவுட் இயக்குநர் குயேண்டின் தரண்டினோ தனது ‘கில் பில்’ படத்தின் அனிமேஷன் காட்சிகளுக்கு, கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ படம் தான் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

அக்னி நட்சத்திரம்-காக்க காக்க
மணிரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’, கவுதம் மேனனின் ‘காக்க காக்க’ 2 படங்களின் தெலுங்கு டைட்டிலும் ‘கர்ஷனா’ தான்

விஜய்-சங்கீதா
தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திரத் தம்பதிகளாக விஜய்-சங்கீதா திகழ்கின்றனர்.ஆனால் திருமணத்துக்கு முன், நடிகர் விஜய்யை ஒரு ரசிகையாகத்தான் சங்கீதா முதலில் சந்தித்தாராம்.

லட்சுமி மேனன்-ஸ்ரீதிவ்யா
ஒரே வருடத்தில் வெளியான ‘பாண்டிய நாடு’ படத்தில் லட்சுமி மேனன் பள்ளி ஆசிரியையாகவும், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஸ்ரீதிவ்யா பள்ளி மாணவியாகவும் நடித்திருந்தனர்.
நிஜத்தில் இது தலைகீழாக இருந்தது. ஏனென்றால், லட்சுமி மேனன் அப்போது பள்ளி மாணவியாகவும்,ஸ்ரீதிவ்யா 26 வயதுப் பெண்ணாகவும் இருந்தனர்

அவ்வை சண்முகி
நடிகர் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி திரைப்படம் ‘சாச்சி 420’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.நடிகர் கமல்ஹாசன் இயக்கிய முதல் படம் இதுதான்

Related Posts

About The Author

Add Comment