கானாவில் கணினி இல்லாமல் கரும்பலகையில் மைக்ரோசாப்ட் வோர்ட் எப்படி செயல்படுகிறது என்பதை படம் வரைந்து பாடம் எடுத்த பள்ளிக்கு இந்திய நிறுவனம் ஒன்று கணினிகளை பரிசாக அளித்துள்ளது.

மேற்கு ஆப்பரிக்க நாடான கானாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கணினி இல்லாமல் கரும்பலகையில் வரைந்து பாடம் நடத்தினார். கணினி இல்லாத காரணத்தினால் ஆசிரியர் ரிச்சர்ட் அபியாக் அகோடோ கரும்பலைகையில் மைக்ரோசாப்ட் வோர்ட் (MS Word) எப்படி செயல்படுகிறது என்பதை வரைந்து பாடம் நடத்தினார்.

இவர் பாடம் நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் வைரலாக பரவியது. அந்த ஆசிரியரின் செயலுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கானாவில் செயல்பட்டு வரும் ஒரு இந்திய ஐ.டி. பயிற்சி நிறுவனம் அந்த பள்ளிக்கு கம்ப்யூட்டர்களை வழங்கி உதவியுள்ளது. அந்த பள்ளிக்கு 5 கம்ப்யூட்டர்கள், 1 லேப் டாப் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்ராவில் உள்ள என்.ஐ.ஐ.டி.யின் தலைமை மேலாளார் அஷிஷ் குமார் கூறியதாவது:-

இதுதொடர்பான வீடியோ பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை நாங்கள் பார்த்தோம். பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விவகாரத்தில் ஆசிரியரின் அர்ப்பணிப்பை பார்த்து மிகவும் மகிழ்ந்தோம். ஒரு ஐ.டி. பயிற்சி நிறுவனமாக நாங்கள் அந்த பள்ளிக்கு உதவி செய்ய முடிவு செய்தோம் என கூறினார்.

Related Posts

About The Author

Add Comment