சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா சவுதாரி பற்றிய தகவல்கள் !

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் இடதுகை அதிரடி ஆட்டக்காரரனா சுரேஷ்ரெய்னா மிகச்சிறந்த பீல்டரும் கூட.ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக விளையாடும் இவர் சென்னை அணியின் முக்கிய வீரரும் கூட.

இவரது மனைவி யார் தெரியுமா.இவரது மனைவி பெயர் பிரியங்கா சவுதாரி. கடந்த 2015ம் ஆண்டு டெல்லியில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தில் இந்திய கிரிக்கெட் உலகை சேர்ந்த முன்னனி வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் கிரேஸியா ரெய்னா என்கிற பெண்குழந்தையும் உண்டு.சமூக சேவைகளில் ஆர்வம் உள்ள பிரியங்கா சவுதாரி தனது மகளின் பெயரில் “கிரேஸியா பவுண்டேஷன்” என்கிற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்திவருகின்றார்.

இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்திற்காக பல்வேறு சேவைகளை செய்துவருகின்றார் பிரியங்கா சவுதாரி.

 

Related Posts

About The Author

Add Comment