ஊடகவியல் டிப்ளோமா முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

தொடர்பாடல் கல்வி மற்றும் ஊடகவியல் டிப்ளோமா கற்கை நெறியினை (தொகுதி IV) முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (27) பிற்பகல் 3.00 மணியளவில் சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை பத்திரிகைப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[b]BPK[/b]

Related Posts

About The Author

Add Comment