22-03-2018 இன்றைய ராசி பலன்

மேஷம்:
mesham

உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய ஆபரணங்களை வாங்கும் யோகம் ஏற்படகூடும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட கூடுதலான லாபம் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

ரிஷபம்:
rishabam

 

அனுகூலமான நாள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். மாலையில் மகான்களை சந்திப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

மிதுனம்:
Midhunam
பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை தொடங்குங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். கணவன் மனைவி அந்நோனியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமாக பணிகளை தொடர்விர்கள். எதிர்பாராத பயன்கள் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களால் கூடுதல் லாபம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

கடகம் :
Kadagam
மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். தேவையில்லாத சிந்தனைகள் உண்டாகும். தந்தைவழியில் நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கூடுதலாக அமையும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

 

சிம்மம்:
simam

அனுகூலமான நாள். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். பிராத்தனைகளை நிறைவேற்ற குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாக்கு.

கன்னி:

உற்சாகமான நாள். உடல் ஆரோகியத்தில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

துலாம்:

புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். தாய்மனன் வருகையில் குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும். சிலர்க்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலத்தில் பணிச்சுமையால் சோர்வாக இருப்பிர்கள் . வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்:

எதிரிகளால் பிரச்சனைகள் உண்டாகும். சகோதரர் உதவியுடன் அதை சமாளித்து விடுவீர்கள்.தாய் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். தேவையில்லாத அலைச்சலால், உடல் நலம் பாதிக்கப்படும். அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும்.

தனுசு:

தந்தைவழி உறவுகள் வருகையால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். உடல் நலம் சிறிது பாதிக்கப்படும். வெளியில் உண்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை இன்று சுமாராகத்தான் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்கள்.

மகரம்:
magaram
மகிழ்ச்சியான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டுப்பெறுவீர்கள். எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். தாய்வழியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

இன்று தன்னபிக்கையுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். எதிர்பாராத பணம் வந்து சேரக்கூடும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வியாபாரம் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மீனம்:

உற்சாகமாக காணப்படுவீர்கள். பணம் கையில் இருப்பதால், வீண்செலவுகள் செய்யாதீர்கள். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் இருக்கும். மாலையில் பிள்ளைகளுடன் பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று வருவீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

 

Loading...

Related Posts

About The Author

Add Comment