முதுமையினால் கண்பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் கண்பார்வை சாதனை புரிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்

முதுமையினால் கண் தசைகளில் பலவீனம் ஏற்படுகிறது. இதனால் ஏராளமானோர் தங்கள் கண்பார்வையை இழக்கின்றனர். குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. தசைகளின் வலிமை குறைவதால் கண்பார்வைக்கு முக்கியமான மாகுலார் பாதிக்கப்படுகிறது. இதனால் முதியவர்களால் படிக்கவோ, வாகனங்கள் ஓட்டவோ முடியவில்லை.

இந்நிலையில், இந்த பிரச்சனையை குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘உடல் உறுப்புகள் மீண்டும் வளர்வதற்கு முக்கிய காரணம் ஸ்டெம் செல்கள்( தண்டு உயிரணுக்கள்) ஆகும். இவை பாதிக்கப்பட்ட உறுப்புகளில் புதிய செல்களை உருவாக்கும் திறன் கொண்டது.

இந்நிலையில், இந்த செல்கள் மூலம் கண் பார்வையை மீண்டும் பெற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கண் பார்வை இழந்தவர்களின் கண்ணில் உள்ள ‘ரெட்டினல் பிக்மண்ட் எத்திலியம்’ என்ற செல்கள் பாதிக்கப்படுகின்றன. ஸ்டெம் செல்கள் மூலம் ‘ரெட்டினல் பிக்மண்ட் எத்திலியம்’ செல்களை மீண்டும் வளரச் செய்ய முடியும். அச்செல்களை வளர்த்து அதனை நோயாளியின் கண்களில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினால் மீண்டும் கண் பார்வை பெறலாம்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த சிகிச்சை இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு கண்பார்வை திரும்ப கிடைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Related Posts

About The Author

Add Comment