நான்கு குடித்தன அளவீடுகளை நடத்த புள்ளிவிபரத் திணைக்களம் திட்டம்

2016 இல் நான்கு குடித்தன அளவீடுகளை நடத்த தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.  குடித்தனக் கூறின் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய அளவீடுகளின் வெளிக்கள வேலைகள் மற்றும் சிறுவர் செயற்பாட்டு அளவீட்டுக்குரிய வெளிக்கள வேலை என்பன ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக மக்களியல் மற்றும் சுகாதார அளவீடானது எதிர்வரும் ஜூன் மாதம் நடத்தப்படவுள்ளது.

இலங்கை தொழிற்பல அளவீடானது 1990 இருந்து காலாண்டு அடிப்படையில் நடாத்தப்பட்டு வருகின்றது. இலங்கையின் தொழிற்பலம், தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பின்மை போன்ற முக்கியமான புள்ளி விபரங்கள் ஆனது இவ் அளவீடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து பெறப்படுகின்றது.
குடித்தனக் கூறின் வருமானம் மற்றும் செலவினங்கள் பற்றிய அளவீடானது தனிநபர் வருமானம், தனிநபர் செலவினம், வறுமை மற்றும் சொத்துக்களின் உரிமை போன்றவற்றை உள்ளடக்கிய புள்ளிவிபரங்களை கணிப்பதற்கு நடாத்தப்படுகின்றது. இவ் அளவீடானது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தப்படுவதுடன் கடைசிச் சுற்றானது 2012/13 இல் நடாத்தப்பட்டது.

இச் சிறுவர் செயற்பாட்டு அளவீட்டின் மூலம் 5 வயதிலிருந்து 17 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்; செயற்பாடுகளின் தகவல்களானது திரட்டப்படுகின்றது. திணைக்களமானது முன்னர் இந்த அளவீட்டை 1999 இலும் 2008/2009 இலும் நடாத்தியிருக்கின்றது. இந்த வருடம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமானது மூன்றாவது தடவையாக இந்த சிறுவர் செயற்பாட்டு அளவீட்டை நடத்துகின்றது. சிறுவர் செயற்பாட்டு அளவீடு 2016 ஆனது தொழிலாளர் உறவுகள் அமைச்சினதும் சர்வதேச தொழிலாளர் அமைப்பினதும் கூட்டுடன் நடாத்தப்படுகின்றது.

இலங்கையில் கிட்டத்தட்ட 5.2 மில்லியன் வீட்டுக் கூறுகள் உள்ளன. நன்கு பரீட்சிக்கப்பட்ட மாதிரி திட்டமிடலுக்கமைக்காக முழு நாட்டையும் பிரதிபலிக்கக் கூடிய 25,000 வீட்டுக் கூறுகளானது தரவு சேகரிப்புக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தது. வீட்டுக் கூறுகளின் வேறு மாதிரியானது சிறுவர் செயற்பாட்டு அளவீட்டிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கையில் ஒரே வீட்டுக் கூறுகளானது தொழிற்பல அளவீட்டுக்கும் குடித்தனக் கூறின் வருமானம் மற்றும் செலவினம் பற்றிய அளவீட்டுக்குமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[b]AR[/b]

Related Posts

About The Author

Add Comment