இந்த ராசியா நீங்க ?… அப்போ இன்னைக்கு இதெல்லாம் நடந்தே தீரும்…

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள்.

மேஷம் வெளியூா பயணங்களால் கீர்த்தி உண்டாகும். உயர்கல்வி பயில்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும். ஞான உபதேசம் கிடைக்கும்.   Loading ad அதிர்ஷ்ட திசை – மேற்கு அதிர்ஷ்ட எண் – 9 அதிர்ஷ்ட நிறம் – இளஞ்சிவப்பு

ரிஷபம் தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொகுசு வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட திசை – தெற்கு அதிர்ஷ்ட எண் – 2 அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்

மிதுனம் இளைய உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர் வாதங்களைத் தவிர்ப்பதால் நற்பெயர் உண்டாகும். நண்பர்களுடன் சேர்ந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை – கிழக்கு அதிர்ஷ்ட எண் – 5 அதிர்ஷ்ட நிறம் – இளம்பச்சை

கடகம் எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். நண்பர்களினால் ஆதாயம் கிடைக்கும். பொருளு்சேர்க்கை உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை – தெற்கு அதிர்ஷ்ட எண் – 1 அதிர்ஷ்ட நிறம் – ஊதாநிறம்

சிம்மம் பூர்விக சொத்துக்களினால் சுப விரயம் உண்டாகும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். தேவையற்ற எண்ணங்களால் மனக்கவலைகள் உண்டாகும். பிறருக்கு உதவிகள் செய்வதால் மனமகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட திசை – மேற்கு அதிர்ஷ்ட எண் – 6 அதிர்ஷ்ட நிறம் – சந்தன வெள்ளை

கன்னி உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபமான முடிவுகள் கிடைக்கும். பொதுநல எண்ணங்கள் மேலோங்கும். பிறருக்கு செய்த உதவியால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பாராட்டுக்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை – வடக்கு அதிர்ஷ்ட எண் – 4 அதிர்ஷ்ட நிறம் – சாம்பல் நிறம்

துலாம் தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானத்துடன் இருக்க வேண்டும். புதிய மனைகள் வாங்குவதில் பல்வேறு தடைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பணிச்சுமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை – கிழக்கு அதிர்ஷ்ட எண் – 5 அதிர்ஷ்ட நிறம் – அடர்பச்சை

விருச்சிகம் வெளிநாட்டு பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். கலையறிவு மேம்படும். உங்களின் புத்திக்கூர்மையால் பெருமை அடைவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை – தெற்கு அதிர்ஷ்ட எண் – 9 அதிர்ஷ்ட நிறம் – பல வண்ண நிறங்கள்

தனுசு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். அதிர்ஷ்ட திசை – மேற்கு அதிர்ஷ்ட எண் – 3 அதிர்ஷ்ட நிறம் – மிதமான கறுப்பு

மகரம் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட திசை – கிழக்கு அதிர்ஷ்ட எண் – 7 அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்

கும்பம் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் விருந்தில் பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்கு வன்மையால் பொருளாதார நிலை உயரும். தாய் வழி உறவுகளின் ஆதரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட திசை – கிழக்கு அதிர்ஷ்ட எண் – 1 அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு நிறம்

மீனம் புதிய வேலை தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி நலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் புதயி உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட திசை – மேற்கு அதிர்ஷ்ட எண் – 3 அதிர்ஷ்ட நிறம் – அடர் மஞ்சள்

Related Posts

About The Author

Add Comment