பாம்பு டான்ஸ் ஆடிய பிரபல நடிகை!

இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி-20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கெனெவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதையடுத்து, நேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடந்த பரபரப்பான போட்டியின் இறுதி பந்தில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸ் இந்திய அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுத்தந்தது அனைவரையும் ஆட்சிரியத்தில் ஆழ்த்தியது.

வங்கதேச வீரர்கள் இதற்கு முன் ஆடிய பாம்பு டான்ஸை விமர்சிக்கும் விதத்தில் சமூகவலைத்தளங்களில் மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதைதொடர்ந்து, பிரபல நடிகை கஸ்தூரி பாம்பு டான்ஸ் ஆடி அதை அந்த வீடியோ காட்சியை தனது ட்விட்டர் பகுதுயில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் விரலாக பரவிவருகிறது.

Related Posts

About The Author

Add Comment