கேரளாவில் பெற்ற மகளை கத்தியால் குத்திக்கொலை செய்த தந்தை

காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லாததால், தன்னுடைய மகளை, தந்தையே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற மகளை கத்தியால் குத்திக்கொலை செய்த தந்தை: கேரளாவில் பரபரப்பு!

காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லாததால், தன்னுடைய மகளை, தந்தையே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் அரிக்கோட் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா (22). இவரின் தந்தை ராஜன் என்பவர் ஒரு டிரக் ஓட்டுநர். இவருடைய மகளான அதிரா என்ற இளம் பெண் கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் டயாலிஸிஸ் மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில்,  அதிரா என்ற இளம் பெண் தலித் இனத்தைச் சேர்ந்த ராணு இளைஞர் ஒருவரை வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளார். அதை தொடர்ந்து, தனது காதலை தந்தையிடம் அதிரா தெரிவித்துள்ளார்.

அதிராவின் தந்தைக்கு இதில் விருப்பமில்லை. ஆனாலும், அதிராவின் தாய், மகளின் விருப்படி திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.  இந்நிலையில், இன்று (23.3.2018) திருமணம் நடக்கவிருந்தது.

இருப்பினும், மகள் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வதை விரும்பாத தந்தை, அதிருப்தியிலேயே இருந்துள்ளார். திருமணத்திற்கு சில மணிநேரங்களே இருந்த நிலையில், தனது மகளிடம் தனது அதிருப்தியை தந்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அப்போது, மணப்பெண்ணுக்கும் அவரது தந்தைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில் ராஜன் ஆத்திரமடைந்து கத்தியால் மகளை சரமாரியாகக் குத்தினார்.

இதில், ரத்த வெள்ளத்தில் இருந்த அதிராவை உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஆதிரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மணப்பெண்ணின் தந்தையான ராஜன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

About The Author

Add Comment