பாம்பை வைத்து வித்தை காட்டியவருக்கு நேர்ந்த பரிதாபம் வீடியோ

உபி மாநிலம் மாஉ மாவட்டத்தில் உள்ள முஹம்மதாபாத் கொஹ்னா என்ற பகுதியில் மலை பாம்பை வைத்து பொதுமக்களுக்கு வேடிக்கை காட்டியவர் பொதுமக்களின் கண் முன்னே பலியாகியுள்ள சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

மலை பாம்பை தனது கழுத்தில் சுத்தி வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றார் ஒருவர். பேசிக் கொண்டிருந்த நபர் ஒரு கட்டத்தில் பேச முடியாமல் கீழே விழுகின்றார். கிழே விழும்போது காப்பாற்றுங்கள் என சமிக்கினை செய்கின்றார்.

வேடிக்கை பார்த்தவர்கள் அவர் ஏதோ புதுசா வித்தை காட்டப் போகின்றார் போலருக்கு என நினைத்து அதை கண்டு கொள்ளவில்லை.

நீண்ட நேரம் கீழே அசைவின்றி கிடக்கின்றார் கழுத்தில் சுத்திய பாம்பு அவரது கழுத்தை நெறுக்கி கொன்றது தெரியாமல் பொதுமக்கள் அவர் ஏதோ புதுசா வித்தை தான் காட்டிக் கொண்டிருக்கின்றார் என நினைத்து கையில் இருந்து காசை எடுத்து போடுகின்றனர்.

ஒருவரும் அவரை காப்பாற்ற முற்படவில்லை. நீண்ட நேரம் ஆகிய பின்னர் ஒருவர் வந்த அவரது கழுத்தில் இருந்த மலை மாம்பை விரட்டி வடுகின்றார்.

பரிதாமான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

Related Posts

About The Author

Add Comment