ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனத்துக்கு கடும் எதிர்ப்பு

பாகி-2’ படத்துக்காக ரீமீக்ஸ் செய்யப்பட்டுள்ள ‘ஏக்…தோக்…தீன்’ பாடலுக்கு நடனமாடிய ஜாக்குலின் பெர்னாண்டஸின் ஆட்டம் செக்ஸ் ஆட்டம் போல இருக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது. #JacquelineFernandes

1988-ம் ஆண்டு வெளியான ‘தேசாப்’ இந்தி படத்தில் இடம் பெற்ற ‘ஏக்…தோக்…தீன்’ பாடல் இந்தியா முழுவதும் பிரபலமாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. லட்சுமிகாந்த் பியர்லால் இசை அமைத்த இந்த பாடலை அல்காயானிக் பாடினார்.

இந்த பாடலுக்கு அந்த படத்தின் நாயகி மாதுரி தீட்சித் நடனம் ஆடிஇருந்தார். அவருடைய நடனத்தை பார்ப்பதற்காகவே அந்த படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது என்று கூறப்பட்டது.

ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படும் ‘ஏக்…தோக்…தீன்’ பாடல் இப்போது ‘பாகி-2’ படத்துக்காக ‘ரீமிக்ஸ்’ செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனம் ஆடி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் உள்ள ஜாக்குலின் நடனத்துக்கு கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

‘ஏக்…தோக்…தீன்’ பாடலுக்கு மாதுரி தீட்சித் எவ்வளவு அழகாக நடனம் ஆடினார். ஆனால் ஜாக்குலின் ஆடியதைப் பார்த்தால் இது நடனம் போல் தெரியவில்லை. ‘செக்ஸ்’ ஆட்டம் போல இருக்கிறது என்று பிரபல இந்தி டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் வருத்தப்பட்டுள்ளார்.

மாதுரி தீட்சித் ஆடிய நடனத்தில் ஒரு பங்கு கூட ஜாக்குலின் ஆடவில்லை. அற்புதமான பாடலை வீணாக்கிவிட்டார்களே… என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாதுரிதீட்சித் நடித்த ‘தேசாப்’ படத்தை இயக்கிய என்.சந்திரா, “ரீமிக்ஸ் பாடல் எந்த ரசனையும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறி இருக்கிறார். #JacquelineFernandes

Loading...

Related Posts

About The Author

Add Comment