மயங்கி விழும் வரை அடிக்க சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ஊரார் – வீடியோ

உபி மாநிலம் புளாந்சஹார் பகுதியில் உள்ள கிராமத்தில் திருமணமான பெண் ஒருவரை ஊரார் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க மரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால் அவர் சுய நினைவு இழக்கும் வரை அடிக்ககும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

அந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவரின் உத்தரவின் பேரில் இந்த தண்டனை அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊரார் சுற்றி நிற்க அந்த பெண்ணின் கைகளை மரத்தில் கட்டி பெண் கதறும் அளவிற்கு பெல்ட்டால் சுழற்றி சுழற்றி அடிக்கப்படுகின்றார். அந்த பெண்ணின் அலறல் சத்தமும் காணொளியில் பதிவாகியுள்ளது.

ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியால் கையில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கியபடி அப்படியே அந்த பெண்ண சுழன்று விழுகின்றார்.

மரத்தில் கட்டப்பட்ட அந்த பெண் இடைவிடாது தாக்கப்படுகின்றார்.

பெண்ணை அடித்தது அந்த பெண்ணின் கணவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண் வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்திருந்தாக கணவர் கூறிய புகாருக்கு அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் இநத் தண்டனையை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

காணொளி வெளியானதை தொடர்ந்து. போலிசார் கிராம பஞ்சாயத்து தலைவர், அவரது மகன் மற்றும் அந்த பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Related Posts

About The Author

Add Comment