இளம்பெண்-க்கு கிடைத்த 2 வயது காதலன்!

ஐக்கிய நாடுகளின் லூஸியானாவை சேர்ந்த இளம்பெண், 2 வயது சிறுவனுடன் நடனமாடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

நியூ ஓர்லென்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஸ்கைலர் ஃபோண்டெயின்(18), ஐக்கிய நாடுகளில் பிரபலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ‘ப்ரோமோ’ நடனத்தின் போத தனது காதலர் கேஜ் மோக்-ன் 2 வயது தம்பியுடன் நடனமாடி புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துக்கொண்டார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

‘ப்ரோமோ’ நடனம் என்பது ஐக்கிய நாட்டு மாணவர்களினால் கடைப்பிடிக்கப்படும் ஒரு வகை நடன பழக்கம். இந்த நிகழ்வில் மாணவர்கள் தங்கள் பள்ளி படிப்பினை முடித்தப் பின்னர் தங்கள் Boy/Girl Friend உடன் ஒன்றாக நடனம் ஆடுவார்கள். நிகழ்ச்சியின் முடிவில் சிறந்த நடன ஜோடி தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை கௌரவிப்பர்.

View image on TwitterView image on TwitterView image on TwitterView image on Twitter

My boyfriend is a Marine and isn’t home to take me to my senior prom… so his little brother stepped in and took his place. Needless to say, this girl is so happy 😍💞

அதே வேலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் காதல் ஜோடியின் உடை, பாவனை, நடனம் என அனைத்தினையும் ஒப்பிட்டு சிறந்த prom king மற்றும் prom queen விருது வழங்கப்படும்.

My boyfriend is a Marine and isn’t home to take me to my senior prom… so his little brother stepped in and took his place. Needless to say, this girl is so happy 😍💞 pic.twitter.com/7CT5KT0cYX

இந்நிலையில், ஸ்கைலர்-ன் காதலர் கேஜ் கப்பல் படையில் பணிபுரிந்து வருவதாலும், அவரால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதாலும் அவர் தனது 2 வயது தம்பி க்ளே-வினை நிகழ்ச்சிக்கு கொண்டுசெல்லுமாறு கேட்டுக்கொண்டார். ஸ்கைலரும் ஆட்சேபனை தெரிவிக்காமல் க்ளே-வுடன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

பின்னர் இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment