(26-03-2018) ராசிபலன்

மேஷம்:
இன்று நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

ரிஷபம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்:
இன்று கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

கடகம்:
இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். கடன்சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்:
இன்று எதிலும் தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். உங்களது சதுர்யத்தால் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சண்டைகள் அவ்வப்போது நிகழும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

கன்னி:
இன்று திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் சேர்க்கை பெறுவர். மின்சாரப் பொருட்களை இயக்கும்போது கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். பரம்பரை சொத்தில் பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

துலாம்:
இன்று ஊர் விட்டு ஊர்களுக்குச் சென்று குடியேறும் நிலை வரலாம். பணவிஷயத்தில் கவனமுடன் செயலபடவும். பிரிந்து சென்ற சொந்தங்கள் ஒன்று கூடுவார்கள். பெண்களால் உயர்ந்த காரியம் நடக்கும். கடன் தொல்லை விலகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

விருச்சிகம்:
இன்று உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துப் போகவும். ஏனெனில் அவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் அவர்களிடம் புரிந்து கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம். கெட்டவர்களின் நட்பை முற்றிலுமாக விலகிக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு:
இன்று புதியதாக அறிமுகமாகும் பழகும் நண்பர்களிடம் கவனமாக பழகவும். வியாபாரிகள் ஒப்பந்த வேலையாட்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு பொன்னான காலமிது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்:
இன்று முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்ட வேண்டாம். தொழில் நிமித்தமாக சிலர் வெளிநாடு பயணங்கள் செல்ல நேரிடலாம். கூட்டுத்தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் காணலாம். கூட்டாளிகளிடம் எந்த விதமான ஒளிவுமறைவும் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

கும்பம்:
இன்று அனாவசியமாக செலவு செய்வதை நிறுத்தாவிட்டால் அவசியத் தேவைகளுக்கு அல்லல்பட வேண்டிய நிலை ஏற்படலாம். பயணத்தின்போது மிகவும் எச்சரிகையுடன் நடந்து கொள்ளுதல் அவசியம். பயணம் கிளம்பும்முன் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

மீனம்:
இன்று அலைச்சல் காரணமாக உணவு உண்ணக்கூட நேரம் இல்லாமல் உழைப்பீர்கள். உத்தியோகஸ்தர்களைப் பொறுத்தவரை நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும். சிலருக்கு பணி இடமாற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

Related Posts

About The Author

Add Comment