உங்களுக்கு தெரியுமா காதல் செய்தால் உடல் எடை கூடும் என்பது ?

ஆரோக்கிய உணவுகளுக்கு பின் போவதினை காட்டிலும், காதல் செய்வதினால் உங்கள் உடல் எடையினை கூட்ட முடியும் என ஓர் ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது!

ஆஸ்திரேலியா வாழ் இளைஞர்கள் சுமார் 15000 கொண்ட நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவித்துள்ளதாவது, Single-ஆக இருப்பவர்களை காட்டிலும் திருமண பந்தத்திலோ அல்லது காதலர்களாக இருப்பவர்கள் அதிக எடையுடன் இருக்கின்றனர் என தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ் லேன்ட் பல்கலை மாணவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளதாவது, உடல் எடைக்கும் அவரது உறவு பழக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறது.

ஆரோக்கிய உணவுகளை உண்பதினை காட்டிலும், ஆரோக்கியமான உறவில் இருப்பவர்கள் சுமார் 12.7 பவுன்ட் சராசரி எடையினை அதிகமாக கொண்டுள்ளனர் என தெரிவிக்கின்றது இந்த ஆய்வு. காதல் உறவு அல்லது திருமண உறவுகளின் மூலம் ஏற்படும் மகிழ்ச்சி தான் இதற்கு அடிப்படை காரணம் எனவும் தெரிவிக்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

இதுகுறித்து இந்த ஆய்வினை மேற்கொண்ட ஸ்டீபெனிக் ஸ்கோப்பியோ தெரிவிக்கையில்… “திருமணம் ஆனவர்கள் தங்களது வாழ்க்கையினை பற்றி கவலை கொள்கின்றனர், தங்கள் குழந்தைகளின் வாழ்வியல் முறையில் கவலை கொள்கின்றனர் எனினும் இந்த விளைவுகள் அவர்களது ஆரோக்கியத்தினை பாதிப்பதில்லை. அதே வேலையில் Single-ஆக இருக்கும் நண்பர்கள் என்ன தான் ஆரோக்கிய உணவினை உட்கொண்டாலும், தொடர் உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் அவர்களால் உடல் எடையினை கனிசமாக கூட்டமுடிவதில்லை.” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஏதுனும் ஒரு உறவில் இருப்பவர்கள் ஆண்டுக்கு சுமார் 3.9 பவுன்ட் எடையினை அதிகரிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!

Related Posts

About The Author

Add Comment