களை கட்டிய சசிகலா புஷ்பா திருமணம் (வீடியோ)

அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவின் திருமண வீடியோ வெளியாகியுள்ளது.

சசிகலாவும், ஜெயலலிதாவும் தன்னை அடித்து விட்டதாக பாராளுமன்றத்தில் புகார் பரபரப்பை ஏற்படுத்தியவர்  அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. அதனால், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின், சசிகலாவிற்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவித்து வந்தார்.
அந்நிலையில், வழக்கறிஞர் ராமசாமி என்பவரை  மார்ச்  26-ம் தேதி சசிகலா புஷ்பா  திருமணம் செய்து கொள்வதாக சமூகவலைத்தளங்களில் ஒரு அழைப்பிதழ் பரவியது. ஆனால், சசிகலா புஷ்பா தரப்பில் எந்த விளக்கும் கொடுக்கப்படவில்லை. ஒருபக்கம், அவர் திருமணம் செய்து கொள்ளும் ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா நீதிமன்றத்தில் முறையிட்டார். எனவே, திருமணத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. எனவே, திருமணம் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்தது.

ஆனாலும், நீதிமன்ற தடையை மீறி டெல்லியில் இன்று காலை சசிகலா புஷ்பாவிற்கும், வழக்கறிஞர் ராமசாமிக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது என செய்திகள் வெளியானது. தற்போது அவர்களின் திருமண வீடியோவும் வெளியாகியுள்ளது.
பொதுவாக திருமண சடங்கில், மணமகன்தான் மணமகளின் கையை பிடித்து வலம் வருவார். ஆனால், இதிலோ, ராமசாமியின் கையை பிடித்து சசிகலா புஷ்பா வலம் வந்தார். எனவே, அவருக்கு பின்னால் ராமசாமி நடந்து சென்றார். இதை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Related Posts

About The Author

Add Comment