வைரலாகும் கவுதம் கார்த்திக் ரெஜினாவின் போட்டோ!!

அதிரடியான கூட்டணிகள் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த பாணியில் சமீபத்தைய அதிரடி கூட்டணி தான் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கின் கூட்டணி.

முதன்முறையாக கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. இப்படத்தை திரு இயக்கவுள்ளார். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்துக்குப் பிறகு திரு இயக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. கார்த்திக், கவுதம் கார்த்திக், இயக்குனர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், ‘மைம்’ கோபி, மனோபாலா ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் இசையமைக்கிறார்.

அப்பா மகன் இருவர் இணைப்பில் : ‘மிஸ்டர்.சந்திரமௌலி’

இப்படத்தில் ஏப்ரல் 27 திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பாடல் ஷூட்டிங் வெளிநாட்டில் நடைபெற்று வந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை படத்தின் இயக்குனர் திரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உங்கள் பார்வைக்கு…..!!

Loading...

Related Posts

About The Author

Add Comment