ரன்வீர் சிங்கை கரம்பிடிக்கிறார் தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி ஜோடிகளாக வலம் வரும் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #DeepikaPadukone #RanveerSingh

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. தமிழில் ரஜினியின் ‘கோச்சடையான்’ அனிமே‌ஷன் படத்தில் நாயகியாக நடித்தார்.

இந்தி பட நாயகன் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக நெருக்கமாக இருந்து வருகின்றனர். ‘பத்மாவத்’ படத்தில் இருவரும் நடித்த பிறகு நெருக்கம் மேலும் அதிகமானதாக கூறப்பட்டது. ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

தற்போது தீபிகாவும், ரன்வீர்சிங்கும் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று உள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தீபிகா படுகோனேவின் அம்மா, சகோதரி ஆகியோர் திருமணத்துக்கு தேவையான பொருட்கள், நகைகள் ஆகியவற்றை பெங்களூரில் வாங்கி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தீபிகா படுகோனே தனது திருமணத்தை தென் இந்திய முறைப்படி நடத்த விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. தீபிகா-ரன்வீர் திருமண தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #DeepikaPadukone #RanveerSingh

Loading...

Related Posts

About The Author

Add Comment