குட்டையா இருக்கிறோம் என்று வருத்தமா?அப்ப இத படிங்க!

ஆள்பாதி ஆடைபாதி என்ற பழமொழியெல்லாம் காணாமல் போய், ஆடை தான் எல்லாமே என்றாகிவிட்ட காலத்தில் இருக்கிறோம். ஒருவர் அணிந்திருக்கும் ஆடையே அவருடைய ஆளுமையைச் சொல்லிவிடும்.

ஒருவரின் எடை, உயரம், வயது என அத்தனைக்கும் அவருடைய பொருந்தும்படி இருக்க வேண்டும். அதனால், அதில் ஆடை தேர்வில் மிகந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

சரியான உயரமும் உடல் எடையும் கொண்டவர்களுக்கு பல டிசைன்களில் ஆடைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவர்களுக்க மத்தியில், குட்டையாக இருக்கும் ஆண்கள் ஹீரோவாக வலம் வர வேண்டுமானால் அவர்கள் நிச்சயம் அவர்களுடைய ஆடைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

குட்டையான ஆண்கள் எந்த மாதிரியான ஆடைகளை தேர்வு செய்யலாம்?

ஒரே நிற ஆடைகள்

குட்டையானவர்கள் ஆடையைத் தேர்ந்தெடுக்கும் போது, நிச்சயம் கலரில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பல வண்ணங்கள் இருக்கும் ஆடைகளைத் தேர்ந்தெடுக்க கூடாது. பிளெயின் மெட்டாலிக் ப்ளூ, ஆக்குவா ப்ளூ போன்ற நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அது அவர்களை, எவ்வளவு பெரிய கூட்டத்துக்கு மத்தியிலும் ஸ்மார்ட்டாக காட்டும்.

நீண்ட கோடுகளைக் கொண்டவை

கோடு போட்ட ஆடைகளைத் தேர்வு செய்யலாம். ஆனால், குறுக்கு கோடுகளையுடைய ஆடைகளைத் தெர்ந்தெடுக்கக் கூடாது. செங்குத்தான கோடுகளையுடைய ஆடைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஃபிட்டான ஆடைகள்

குட்டையானவர்கள் ஆடையைத் தேர்வு செய்வதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் அளவு. தொளதொள ஆடைகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். அது உங்களை ரசனையற்றவர்களாகக் காட்டிவிடும். அணியும் ஆடைகள் எப்போதும் ஃபிட்டாக இருக்க வேண்டும். அதனால் ஒவ்வொரு முறை புது ஆடைகள் வாங்கச் செல்லும்முன், ஒருமுறை அளவுகளை சரிபார்த்துச் செல்லுங்கள். பெரும்பாலும் எல்லா கடைகளிலுமே டிரையல் பார்த்துக் கொள்ள அறை உண்டு. அதனால், அளவுகளை கச்சிதமாகப் பார்த்து வாங்குங்கள்.

கவர்ச்சியான வண்ணங்கள்

ஃபார்மல் ஆடைகளைப் போன்றே கேசுவல் ஆடைகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, ஃபார்மலில் தேர்வு செய்வது போன்ற வண்ணங்களை, கேசுவல் ஆடைகளில் தேர்வு செய்யக்கூடாது. கேசுவல் ஆடைகள் எப்போதும் கவர்ச்சியான அடர் நிறங்களில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அவை பெண்களுக்கு மத்தியில், உங்களை ஹீரோவாகக் காட்டும்.

ஆடைக்கேற்ற ஆக்சசரீஸ்

ஆடை மட்டுமே உங்களுக்கான முழுமையைத் தந்துவிடாது. ஆடைக்கேற்றவாறு மற்ற ஆக்சசரீஸ் மீதும் கவனம் செலுத்த வேண்டும். ஃபார்மல்ஸ் அணியும் போது, அணியும் ஆடைக்கேற்ற கலரில் டை அணிய வேண்டும். கேசுவல்ஸ் ஆக இருந்தால் அதற்குத் தகுந்தபடி பெல்ட், ஹேட் ஆகியவை அணியலாம்.

ஆடையைத் தேர்வு செய்யும்போது, இவற்றையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டாலே, ஷாட்டரான நீங்கள் ஸ்மாட்டராக மாறிவிடலாம்.

* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்…

Loading...

Related Posts

About The Author

Add Comment