திருமணத்துக்கு தயாராகும் நயன்தாரா

நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவரும் காதல் வயப்பட்ட இவர்கள் இருவருக்கும் தற்போது ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்றும் கிசுகிசுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பேசும்போது, “எனது வருங்கால கணவருக்கு நன்றி” என்று சொன்ன வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கேரளாவில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க ரகசியமாக நிச்சயதார்த்தம் நடத்தியதாக தகவல் வெளியாயின. நிச்சயதார்த்தத்தை முடித்த கையோடு தான் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த வருடம் இறுதியில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கும் என்று வெளியாகி உள்ளது.

நயன்தாரா தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, தெலுங்கில் ‘சை நரசிம்ம ரெட்டி’ என்ற படங்களில் நடித்து வருகிறார்.

Related Posts

About The Author

Add Comment