சிறுநீரக மோசடி தொடர்பான அறிக்கை நாளை ராஜித்தவிடம்

சிறுநீரக மோசடியில் இலங்கை வைத்தியர்கள் அறுவர் தொடர்புபட்டிருப்பதாக, இந்தியப் பொலிஸார் வௌியிட்ட தகவல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை, நாளை, தன்னிடம் கையளிக்கப்படலாம் என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அந்தக் குழு நியமிக்கப்பட்ட தினம் தொடங்கி மூன்று நாட்களுக்குள் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

About The Author

Add Comment